ஹவாலா பணம் ரூ.10 கோடி சிக்கியது! நான்கு பேர் கைது! தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு தொடர்பா என விசாரணை?

0
134

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய  போலீஸார்  நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு  காரில் இருந்து லாரிக்கு பொருட்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்ட காவலர்கள் அவர்களிடம் சாதாரணமாக விசாரித்தனர். ஆனால் போலீஸாரைக் கண்டதும் அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.  போலீஸாரின்  கேள்விகளுக்கு  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.  இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த பார்சல்களைப் பிரித்து பார்த்துள்ளனர். அதில், கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.

Also Read : பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு, எழுதும் திறன் இல்லை! கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

அவர்கள் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் லாரி மற்றும் காரை பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். அதில் மொத்தம் பத்து கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அதனை எடுத்து வந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில், இந்தப் பணம், சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் கோழிக்கோடுக்கு கடத்தப்பட இருந்தது. துபாயில் வசிக்கும் ரியாஸ் என்பவரது உத்தரவுப்படி, சென்னை மண்ணடியைச் சேர்ந்த நிசார் அகமது என்பவர் பணத்தை கடத்தியுள்ளார். நிசார் அகமது தந்தையின் நெருங்கிய நண்பர்தான் ரியாஸ்.

Also Read : இளம் தலைமுறையினரை பிஎப்ஐ தவறாக வழிநடத்தியது! தடையை வரவேற்பதாக முஸ்லீம் லீக் அறிவிப்பு!

10 கோடி ரூபாயை 48 மூட்டைகளில் கட்டி, கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவரான சர்புதீன் என்பவரிடம் ஒப்படைக்குமாறு நிசாரிடம் ரியாஸ் கூறியதாக தெரிகிறது. இதன்படி, நிசார் அகமது, ஹூண்டாய் ஐ10 காரில் எடுத்துச் சென்று, பணத்தை லாரியில் மாற்றும் போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். நிசார் அகமதுவுடன் அவரது ஓட்டுநர் வாசிம் அக்ரம், கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் சர்புதீன் மற்றும் நாசரை போலீஸார் கைது செய்தனர். இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற உறுதியாகக் கூறப்படுகிறது. இந்தக் கடத்தலின் பின்னணியில் தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்புள்ளதா? என போலீஸார் விசாரிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry