சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!

0
361
Cancer Detection Camp at Paterson Cancer Centre, Chennai | GETTY IMAGE

சென்னையில் பேட்டர்சன் புற்றுநோய் மையமும், புற்றுநோய் தணிப்பு அறக்கட்டளையும் இணைந்து நாளை தொடங்கி ஒரு மாதத்துக்கு இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்த உள்ளது.

உலக நாடுகளின் வரிசையில் புற்றுநோய் பாதிப்பு பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்திய தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்ப்படுகின்றனர். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பே இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.

Also Read : செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

மார்பகப் புற்றுநோயில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் கடந்த 5 ஆண்டுகளில் 4 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய், 53 பெண்களில் ஒருவருக்கு கர்ப்பபை வாய் கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. மரபணு மூலம் 14 சதவீதமே புற்று நோய் பாதிக்கக்கூடும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் பதிவான புற்றுநோய் பாதிப்பு 19 முதல் 20 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் இதைவிட மூன்று அதிகமாக இருக்கும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பான FICCI கூறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், புற்றுநோயின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. புற்றுநோய் வகைகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில் ஆண்களுக்கு வயிற்றுப் புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதாக தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Paterson Cancer Center Dr S Vijayaraghavan

புற்றுநோய் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். புற்றுநோய் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். புற்றுநோய் கட்டிகளை துவக்க கட்டத்தில் கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். இதன் அடிப்படையிலேயே, சென்னை வடபழனி, விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில் இயங்கும், மூத்த மருத்துவர் விஜயராகவன் நிறுவியுள்ள பேட்டர்சன் புற்றுநோய் மையம், ஒவ்வொரு ஆண்டும் இலவச புற்று நோய் கண்டறிதல் முகாம் நடத்துகிறது.

19.06.2023 தொடங்கி 19.07.2023 வரை ஒரு மாதத்துக்கு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக முகாம் நடைபெறும். முகாமில் பங்கேற்க விரும்புவோர் காலை 8 மணி முதல் 2 மணி வரை 9962577181 / 755022110 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாமுக்கான விழா பேட்டர்சன் புற்றுநோய் மையத்தில் நாளை காலை 10.25 மணி முதல் 11.45 மணி வரை நடைபெறுகிறது. பணி நிறைவுபெற்ற நீதியரசர் பி.என். பிரகாஷ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் டாக்டர் அமல்ராஜ், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசர் முனைவர் பொன்ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், காவல் துணை ஆணையர் டாக்டர் மூர்த்தி, கல்வியாளர் தாமு, பேட்டர்சன் எதிக்ஸ் கமிட்டியைச் சேர்ந்த டி.ஏ. சேகர், நடிகை அபர்மதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். CALF டிரஸ்டியான பி.டி. கோவிந்தராஜன் வரவேற்புரை நல்க, பேட்டர்சன் கேன்சர் மைய மேலாண் இயக்குநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் விஜயராகவன் நன்றியுரை கூற உள்ளார்.

Featured Videos from VELS MEDIA

தண்ணீருக்கும் கேன்சருக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு! Powerful Truth about Cancer | Listen Fully

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry