துரத்தப்பட்ட ஃபேவரைட் நீலக்குருவி! உள்ளே வந்த ‘X’! டிவிட்டர் லோகோவை திடீரென மாற்றிய எலோன் மஸ்க்!

0
43
An X logo is displayed on a smartphone showing Elon Musk’s Twitter feed

டிவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் மாற்றியுள்ளார். பயனர்களின் ஃபேவரைட்டான ‘நீலக் குருவி’யை நீக்கிவிட்டு, ‘X’ என்ற புதிய லோகோவை டிவிட்டருக்கு நிர்மாணித்துள்ளார். பழகிய ஒருவரை இழப்பது போலிருப்பதாக பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

டிவிட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம்.

தனது X கார்ப்பரேஷன் சேவைகளை டிவிட்டருடன் இணைக்கவும் மஸ்க் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக டிவிட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் உலகம் முழுவதுமுள்ள டிவிட்டர் பயனர்கள் லோகோ மாற்றம் குறித்து அதிருப்தி கூறுகின்றனர்.

பயனர்கள் பலரும் ‘டிவிட்டர் லோகோவின் பயணம்’ என ஒரு படத்தை ரீ-ட்வீட் செய்து டிரெண்டாக மாற்றி வருகின்றனர். அது 2006 முதல் தொடர்ச்சியாக டிவிட்டர் நிறுவன லோகோவின் படிப்படியான மாற்றங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

“போய் வாருங்கள் நட்பே. உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம்” என பயனர் ஒருவர் நீலக் குருவிக்கு விடை கொடுத்துள்ளார். அதில், தான் வெளியேற்றப்பட்டதாக சொல்லி கண்ணீர் சிந்துகிறது நீலக் குருவி. சிலர் #RIPTwitter எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

டிவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கினார். அது முதலே அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, டிவிட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் டிவிட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வசூலிப்பது என அது நீள்கிறது.

இதன் தொடர்ச்சியாகவே டிவிட்டர் தளத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக்குருவி லோகோவை, ‘எக்ஸ்’ (X) என மஸ்க் மாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார்.

இந்தச் சூழலில் டிவிட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற முடிவு செய்த எலோன் மஸ்க், அது குறித்து டிவீட்டும் செய்திருந்தார். நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்த சூழலில், தற்போது லோகோவை ‘X’ என மாற்றியுள்ளார். ‘X’ மீது கொண்ட அன்பின் காரணமாக மஸ்க் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிகிறது.

Twitter changes logo to ‘X’, replacing blue bird symbol

டிவிட்டரின் (twitter.com) டொமைன் x.com எனவும் மாற்றப்பட்டுள்ளது. இதன் கீழ் மஸ்க் உரிமையாளராக உள்ள X கார்ப்பரேஷன் நிறுவன சேவைகளை பயனர்கள் பெறமுடியும் என தெரிகிறது. குறிப்பாக நிதி சார்ந்த சேவைகளும் இதில் இருக்கும் எனத் தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry