புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், நோய்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கருத்தில் கொண்டு, 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஐதராபாத்தில் இருந்து இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் (National Institute of Nutrition (NIN)), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (Indian Council of Medical Research (ICMR) இணைந்து ‘இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை’ திருத்தி வெளியிட்டுள்ளது.
ICMR இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல், NIN இயக்குநர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளனர். என்.ஐ.என். இயக்குநர் டாக்டர் ஹேமலதா தலைமையின் கீழ் இயங்கிய நிபுணர்கள் குழுவால் 17 விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உடல் பருமனைத் தடுக்க சீரான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தழுவுவதன் அவசியத்தையும் வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. வழக்கமான உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதற்காக உணவு லேபிள்களைச் சரிபார்த்தல் போன்றவற்றை நிபுணர் குழு பரிந்துரைகள் எடுத்துக்காட்டுகின்றன.
Also Read : Bajaj Bruzer 125 CNG Bike! ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைக்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்?
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஒரு நாளைக்கு 2000 கிலோ கலோரி உட்கொள்ள, சுமார் 250 கிராம் தானியங்கள், 400 கிராம் காய்கறிகள், 100 கிராம் பழங்கள், 85 கிராம் பருப்பு வகைகள் / முட்டை / சதை உணவுகள், 35 கிராம் நட்சுகள் மற்றும் விதைகள் மற்றும் 27 கிராம் கொழுப்பு / எண்ணெய்களை சாப்பிட வேண்டும். இயற்கையாகவே கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து சர்க்கரை கிடைப்பதால், ஒரு நாளைக்கு 20-25 கிராம் (ஒரு டீஸ்பூன் தோராயமாக 5.7 கிராம்) அளவு மட்டுமே உட்கொள்ளவும், புரத சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதைத் தவிர்க்கவும், எண்ணெயைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்பாண்டகள் சமையலுக்கு பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது, இதில் சமைக்க குறைந்த எண்ணெயே தேவைப்படும் மற்றும் ஊட்டச்சத்தை பாதுகாக்கும் என என்ஐஎன் கூறுகிறது. மேலும், சட்னி, சாம்பார் போன்ற அமில உணவுகளை அலுமினியம், இரும்பு, மூடப்படாத பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களில் சேமித்து வைப்பது பாதுகாப்பற்றது; துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் பொதுவாக பாதுகாப்பாக கருதப்படுகிறது என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

170 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு மேல் வைத்து நான்-ஸ்டிக் பான்களில் சமைப்பது ஆபத்து. மேலுள்ள பூச்சு தேய்ந்து அல்லது சேதமடைந்திருந்தால் அதில் சமைக்கக்கூடாது; கிரானைட் கல்லால் ஆன பாத்திரங்கள் டெஃப்லான் பூச்சு இல்லாவிட்டால் பாதுகாப்பானது எனவும், வறுப்பதற்கு ஏர் – ஃபிரையர்களை பயன்படுத்தலாம் எனவும் NIN குழு கூறியுள்ளது. உணவுப்பொருள் பேக்கிங் லேபிள்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
மட்டுமின்றி தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய பரிந்துரை என்று பார்த்தோமேயானால், சமையல் எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்து, நட்ஸ்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கடல் உணவுகள் மூலம் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைப் பெறுவதாகும்.
சைவ உணவு உண்பவர்கள், ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற என் -3 பியூஎஃப்ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு போதுமான பி 12 மற்றும் என் -3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைப் பெறுவது சவாலாக உள்ளது. மேக்ரோனூட்ரியன்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை பெற, காய்கறிகள், பழங்கள், பச்சை இலை காய்கறிகள், வேர்கள் மற்றும் கிழங்குகளை ஒரு நாளைய உணவில் பாதி அளவு எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புரோட்டீன் சப்ளிமென்ட்ல் எனப்படும் புரதப் பவுடர்களை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. புரதப் பவுடர்கள் முட்டை, பால், சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி மற்றும் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. புரோட்டீன் அல்லது புரதப் பவுடர்களில் கூடுதல் சர்க்கரை, கலோரி அல்லாத இனிப்புகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் போன்ற சேர்க்கைகள் இருக்கலாம். எனவே வழக்கமான நுகர்வுக்கு புரோட்டீன் பவுடர்கள் அறிவுறுத்தப்படுவது இல்லை. Branched-Chain அமினோ அமிலங்கள் நிறைந்த புரதங்கள் தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே அதிக அளவு புரதத்தை உட்கொள்வது நல்லதல்ல என்று NIN தெரிவித்துள்ளது.

“கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஒரே நேரத்தில், அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது, இது குடும்பங்களில் இரட்டை சுமையை உருவாக்குகிறது. இந்தியாவில் 56.4% பேருக்கு ஆரோக்கியமற்ற உணவுகளால் நோய் ஏற்படுவதாக மதிப்பீடுகள் காட்டுகின்றன” என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வகுத்த குழுவின் தலைவரான என்ஐஎன் இயக்குனர் டாக்டர் ஹேமலதா கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry