
ஆட்டோமொபைல் உலகமே வாய்பிளந்து ஆச்சரியப்படும்படியான ஒரு தரமான சம்பவத்தைச் செய்யக் காத்திருக்கிறது பஜாஜ் டூவீலர் நிறுவனம். இதற்கு ஜூன் 18 வரை காத்திருங்கள்.
அடுத்த மாதம் 18-ம் தேதி இந்தியாவின் முதல் சிஎன்ஜி (Compressed Natural Gas – CNG) பைக்கைக் கொண்டு வரப் போகிறது பஜாஜ். லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆன பல்ஸர் NS400Z பைக்கின் டெஸ்ட் ரைடின்போதே பஜாஜ் கம்பெனியினர் நம்மை 18-ம் தேதி ரெடியாக இருக்கச் சொன்னதற்குக் காரணம் இதுதான்.
Big News!
Rajiv Bajaj confirms the Bajaj CNG bike, likely to be called the Bruzer 125 to be launched on June 18.He also claims that the monthly running cost of CNG bike will be half of that of a petrol powered bike. #BajajCNG #CNG #Bruzer125 pic.twitter.com/8JImQSDp8h
— Acko Drive (@AckoDrive) May 3, 2024
இப்போது Bajaj CNG பைக்கின் Blueprint இணையத்தில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. ‘பைக்கில் CNG எப்படிச் சாத்தியமாகும்? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஏனென்றால் பைக்கின் எடை 150 கிலோவுக்குள் இருக்க வேண்டும்’ என்கிற கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் இந்த புளூப்ரின்ட். Bajaj Bruzer 125 CNG Bike வரைபடத்தில் Sloper Engine இருப்பது தெளிவாக இருக்கிறது. அதாவது, இன்ஜினை கொஞ்சம் சாய்வாக டிசைன் செய்திருப்பார்கள். இதனால் கொஞ்சம் இடவசதி கிடைக்கும். அநேகமாக, இது 30 – 40 டிகிரி ஸ்லோப்பர் இன்ஜின் ஆக இருக்கலாம். இந்த மோட்டாரின் டிஸ்ப்ளேஸ்மென்ட் 125சிசியாக இருக்கலாம்.

இதில் சவால் என்னவென்றால், சிஎன்ஜி பைக் என்றால், அதற்கான சிலிண்டரும் வேண்டும், பெட்ரோல் டேங்க்கும் இருக்க வேண்டும்; சிஎன்ஜி டேங்க்கும் இருக்க வேண்டும். இந்த ஸ்லோப்பர் இன்ஜின் லேஅவுட் டிசைன்தான், சிஎன்ஜி சிலிண்டரை ப்ளேஸ் செய்ய உதவுகிறது. ரைடரின் சீட்டுக்கு அடியில் இதை பொசிஷன் செய்திருக்கிறது பஜாஜ். சிஎன்ஜி டேங்க் ஓப்பனாக இருக்கக் கூடாது; அதனால் பைக்கின் நல்ல கட்டுறுதியான சப் ஃப்ரேமில் இதை ஷீல்டு செய்திருக்கிறார்கள். இதற்காகவே இந்த பைக், ஹெவி டியூட்டி கொண்ட ட்யூபுலர் ஸ்டீல் கிரேடில் ஃப்ரேம் கொண்டு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. சில மெட்டல் பிரேஸ்களும் கொண்டு பைக்கின் சேஸியோடு இதை இணைத்திருப்பதால், அங்கு ஒரு டேங்க் இருப்பதே தெரியாது.

சிஎன்ஜி சிலிண்டரை சும்மா நினைத்து விட முடியாது. கொஞ்சம் ரிஸ்க்கும் அதிகம். அதனால், பாதுகாப்பு விகிதப்படி ஏதேனும் விபத்துகளின் போதோ, வண்டி கீழே விழுந்தாலோ பெரிதாக தாக்கம் விழாதவாறு பஜாஜ் இன்ஜீனியர்கள் இதை டிசைன் செய்திருக்கிறார். அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதைத் தாண்டி, LPG (Liquid Petroleum Gas)-யை விட, CNG (Compressed Natural Gas) எரிபொருள் கொஞ்சம் பாதுகாப்பானதும்கூட! காரணம், இது காற்றைவிட அடர்த்தி குறைவு. அதனால் கசிந்தால்கூட காற்றில் அப்படியே கரைந்துவிட வாய்ப்புண்டு.
பெட்ரோல் டேங்க் வழக்கம்போல் பைக்கில் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கும். என்ன, சாதாரண பைக்குகளில் இருப்பதுபோல் அதிகம் கொள்ளளவு எதிர்பார்க்க முடியாது. கொஞ்சம் அளவில் சிறிதாக இருந்தால்தான், சிஎன்ஜி சிலிண்டரை ப்ளேஸ் செய்ய முடியும். இதில் எத்தனை லிட்டர் டேங்க் இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த சிஎன்ஜியை எப்படி ஃபில் செய்வது? பெட்ரோல் என்றால் பைக்கை விட்டு இறங்காமலேயே டேங்க்கைத் திறந்து எரிபொருள் நிரப்பலாம். அநேகமாக, சிஎன்ஜி எரிபொருள் நிரப்ப பைக்கை விட்டு இறங்கி, சீட்டைத் திறந்துதான் போட வேண்டி இருக்கலாம். ஸ்கூட்டர்களில் இருப்பது மாதிரி Hinged Seat டைப் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாதாரண கம்யூட்டிங் பைக் என்பதால், இதில் முன் பக்கம் வழக்கமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின் பக்கம் டூயல் ஷாக் அப்ஸார்பர்களும்தான் இருக்கும். 18-ம் தேதி வரை காத்திருப்போம்…! அதிக மைலேஜுக்காக ஏங்கும் பைக் ரைடர்களின் எதிர்பார்ப்பை பாஜாஜ் நிறுவனம் பூர்த்தி செய்யுமா என்பது தெரிந்துவிடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry