ஸ்கூட்டர் பிரிவில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் ஜுலை மாதம் ஆக்டிவா இ-ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் இன்றுவரை மிகவும் சக்திவாய்ந்த வரம்பைக் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ரேஞ்சை பொறுத்தவரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 முதல் 150 கிமீ வரை வழங்க வாய்ப்புள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பான Honda Mobile Power Pack removable battery பொருத்தப்படும். இதை சார்ஜ் செய்ய 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். ஆனால் இதில் ஹைப்பர் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதன் தோற்றம் ஹோண்டா ஆக்டிவாவின் பெட்ரோல் வேரியன்ட்டைப் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் எஸ்1, டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் மாடல்களுடன் ஆக்டிவா எலெக்ட்ரிக் போட்டி போடும். ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக் போன்றே லாம்ப்ரெட்டா நிறுவனத்தின் வி200 மாடல் இந்தியாவில் அதே ஜூலை 2024ல் அறிமுகம் செய்யப்படுகிறது.
ICE (Internal Combustion Engine) இன்ஜின் கொண்ட ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் மாடலில் இயங்கும் ஹோண்டா ஆக்டிவா சேஸியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாக ஆட்டோகார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டியூப்லெஸ் டயர்கள், 12 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளதாக தெரிகிறது. சஸ்பென்ஷனை பொறுத்தவரை, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட்-அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் ஆகியவை இருக்கும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக இருக்கும்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு நல்ல BLDC மோட்டாருடன் வருகிறது. மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனுடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மொபைல் போன் சார்ஜிங் சாக்கெட், பார்க் அசிஸ்ட், ரிவர்ஸ் அசிஸ்ட், ஆண்டி தெஃப்ட் செக்யூரிட்டி அலாரம், புளூடூத் அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதல் போன்ற நவீன அம்சங்கள் காணப்படுகின்றன. மேலும் எல்இடி ஹெட்லேம்ப், பரந்த முன் ஏப்ரன் மற்றும் தட்டையான இருக்கை ஆகியவையும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். உயர் வேரியண்ட்களில் தொடுதிரை டிஸ்ப்ளே, இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நேவிகேஷன் வசதியும் வழங்கப்படலாம்.
ஐசிஇ இன்ஜினுடன் கூடிய ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், Decent Blue Metallic, Pearl Siren Blue, Black, Pearl Precious White, Rebel Red Metallic, Matte Axis Grey Metallic ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கக்கூடும். ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்தது 3 ஆண்டுகள் மற்றும் 30,000 கி.மீ. உத்தரவாதத்துடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். ஹோண்டா தயாரிப்புகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : மைதா பற்றிய மாயை! உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்?
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry