கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல்நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் இப்போது கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் கோவாக்ஸின் போட்டுக்கொண்ட 1,024 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
Also Read : மைதா பற்றிய மாயை! உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்?
இதில் 635 பேர் இளைஞர்கள், 291 பேர் நடுத்தர வயதினர் ஆவர். அதனடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஆய்வில் கலந்து கொண்ட 47.9% இளைஞர்கள் மற்றும் 42.6% நடுத்தர வயதினருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஆய்வில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை
* தோல் சம்மந்தமான நோய் – 10.5 % பேர்
* நரம்பு சம்பந்தமான நோய் – 4.7 % பேர்
* பொதுவான பிரச்சனைகள் – 10.2% பேர்
ஆய்வில் நடுத்தர வயதினருக்கு ஏற்பட்ட பிரச்னை
* தசை சம்பந்தமான பிரச்னை – 5.8 % பேர்
* நரம்பு சம்பந்தமான பிரச்னை – 5.5 % பேர்
* பொதுவான பிரச்சனைகள் – 8.9 % பேர்
ஆய்வு முடிவுகளின் படி கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று மற்றும் சுவாசக்குழாயில் நோய்த்தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நடுத்தர வயதினர் 1.6% பேருக்கும் , பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் 2.8% பேருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் போட்டவர்களில் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியை, இந்தியாவில் `கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்தது. கோவிஷீல்டு தடுப்பூசியைக் கண்டறிந்த தாய் நிறுவனமான அஸ்ட்ராஸெனிகா (AstraZeneca) நிறுவனத்தின் மீது ஜேமி ஸ்காட் என்ற நபர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் என் இரு குழந்தைகளுக்கு மூளைப்பகுதியில் ரத்தம் உறைவு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதுதான் காரணம், எனவே அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அந்நிறுவனத்தின் மீது இதே போன்று 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் கோவிட் தடுப்பூசியால் மூளையில் ரத்தம் உறைதல், ரத்தத் தட்டணுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இவை எப்படி ஏற்படுகின்றன என்பது பற்றி தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry