மாணவர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (JEE) எழுதாமலேயே, சென்னை ஐஐடி நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் இளநிலை பட்டப்படிப்பில் சேர முடியும். நான்கு ஆண்டு பி.எஸ். பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஐஐடி அறிவித்துள்ளது.
டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு BS Programming and Data Science என்ற ஆன்லைன் பட்டப் படிப்பையும், கடந்த ஆண்டு BS Electronics Systems என்ற ஆன்லைன் படிப்பையும் ஐஐடி அறிமுகப்படுத்தியது.
Also Read : மைதா பற்றிய மாயை! உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்?
பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேக்ஷன், பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய இரு படிப்புகளிலும் பட்டம் பெற விரும்புபவர்களுக்கு சென்னை ஐஐடி குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வியை வழங்குகிறது. டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகளாகும். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26.05.2024 கடைசி தேசியாகும். ஆர்வமுள்ள மாணவ – மாணவிகள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JEE தேர்வை எழுதாமலேயே, அடிப்படை தகுதித் தேர்வில் (Qualifier Process) தேர்ச்சி பெற்று இந்தப் பாடத்திட்டங்களில் சேர முடியும். இதற்காக மாணவர்களுக்கு 4 வாரம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். டேட்டா சயின்ஸ் படிப்புக்கு ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், கணக்கு சிந்தனை தொடர்பான பாடங்களும், அதேபோல், எலெக்டானிக் சிஸ்டம் படிப்புக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், சர்க்யூட், சி புரோகிராமிங் தொடர்பான பாடங்களும் இடம்பெறும். 4 வாரப் பயிற்சியின் முடிவில் தகுதித்தேர்வு நடத்தப்படும்.
அதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறுவோர் ஆன்லைன் படிப்பில் சேரலாம். வகுப்புகள் ஆன்லைன் வழியில் நடைபெறும். பதிவுசெய்யப்பட்ட வீடியோ வகுப்புகளையும் மாணவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். மேலும்,ஆன்லைன் வழியில் நேரடி வகுப்புகளும் (லைவ் கிளாஸ்) இருக்கும். ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 அல்லது 2024 தேர்வுகளில் பங்கேற்ற தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேரடி சேர்க்கையும் உண்டு. 4 ஆண்டுக் காலம் கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு, ஃபவுண்டேஷன், டிப்ளமா, பிஎஸ்சி பட்டம், பிஎஸ் பட்டம் என 4 நிலைகளைக் கொண்டது. தேர்வு மையங்களில் மாணவர்கள் நேரில் சென்று தேர்வை எழுத வேண்டும்.
இன்ஜினியரிங், மானுடவியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவ – மாணவிகள், பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேக்ஷன் படிப்புக்கும், பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல் படித்தவர்கள் பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்புக்கும் விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு எதுவும் கிடையாது.எஸ்சி, எஸ்டி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Also Read : Covaxin தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் உடல்நல பாதிப்புகள்! ஓராண்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஐஐடி ஆன்லைன் படிப்புகளும், ஐஐடியின் நேரடி படிப்புகளுக்கு இணையானவை. எனவே அவை அரசு, தனியார் வேலைவாய்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படுகிறது. நடப்பு பருவ சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது.
சர்வதேச அளவில் வளர்ந்து வரும் முக்கிய படிப்புகளில் ஒன்றாக இந்த டேட்டா சயின்ஸ் மாறி இருக்கிறது. வரும் காலத்தில் இந்த துறையிலேயே அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி பல்வேறு தனியார் கல்லூரிகள் டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ் பாடப் பிரிவுகளை உருவாக்கியுள்ளன. சேர்க்கைக்காக பல லட்சங்களும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் கல்லூரி நிர்வாகம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்களை வைத்தே டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ் வகுப்புகளை எடுக்கச் சொல்வதாகத் தெரிகிறது. இந்த இரு பிரிவுகளிலும் படிப்பு அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி வகுப்பெடுப்பார்கள் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. ஏனென்றால் டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ் பிரிவில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடிய அளவுக்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் குறைவாகவே உள்ளனர் என்பதை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் ஐஐடி-யில் டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆர்ட்டீஃபீஷியல் இன்டலிஜென்ஸ் என அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் அந்ததந்த துறை சார்ந்த வல்லுநர்கள் வகுப்பெடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry