பல பழமொழிகள் கேள்விபட்டிருப்போம். நாம் தெரிந்து கொண்ட பழமொழிகளுக்கு பின் இருக்கும் அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம்.
‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்ற பழமொழியை பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். இந்த பழமொழியை வைத்து கழுத்தைக்கு கற்பூர வாசனை எப்படி தெரியும்? என்று கிண்டலாக சொல்வோம். ஆனால் இந்த பழமொழிக்கு இது உண்மை காரணம் இல்லை.
சங்க காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் படுத்து உறங்குவதற்கு பாய் தான் பயன்படுத்தினார்கள். அந்த பாய் புல் கொண்டு தயாரித்தார்கள். அந்த புல்லுக்கு கோரைப்புல் மற்றும் கற்பூர புல் என்று இரண்டு வகைகள் உண்டு.
இந்த கோரைப் புல்லுக்கு கழு என்று வேறு பெயர் உண்டு. இந்த கோரைப் புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசம் வரும். கழு என்ற கோரைப் புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும் போது அந்த புல்லில் இருந்து வரும் கற்பூர வாசனை நமது மூக்குக்கு தெரியும் என்பது தான் இந்த பழமொழியின் அர்த்தம்.
Also Read : 16 பெத்துகிட்டு எப்படி பெருவாழ்வு வாழறது? ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ பழமொழிக்கு அர்த்தம்தான் என்ன?
இந்த கோரைப் புல் கொண்டு தைத்த பாயில் படுக்கும் போது இதில் இருந்து வரும் கற்பூர வாசத்திற்கு தேள், பூரான் மற்றும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் நெருங்காது. அதனால் தான் அந்த காலத்தில் கோரைப் புல்லில் செய்த பாயை பயன்படுத்தினார்கள். அந்த நேரத்தில் தான் பெரியவர்கள் “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்“ என்று சொன்னார்கள். இந்த வாசகம் நாளடைவில் மருவி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று மாறிவிட்டது. இனி இந்த பழமொழியை நாம் சரியாக சொல்வோம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry