குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!

0
137
What should the family deity do to stay at home?

குலதெய்வத்தின் அருளை பெறுபவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் அனைவருக்கும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை.

பலருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்தாலும் சிலருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். இதற்கு குலதெய்வ சாபம், குலதெய்வ கட்டு என்று பல காரணங்கள் இருக்கின்றன. இந்த அனைத்துக் காரணங்களையும் சரி செய்துவிட்டு குலதெய்வம் வீட்டிற்குள் வரவும், மகாலட்சுமியின் அருளைப் பெறவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

என்னதான் முறையாக குலதெய்வ வழிபாட்டை செய்தாலும் குலதெய்வ சாபம் அல்லது கட்டு இருக்கும் பட்சத்தில் குலதெய்வம் நம்முடைய வீட்டிற்குள் வராது. அப்படி குலதெய்வம் நம்முடைய வீட்டிற்கு வரவில்லை என்றால் எதிர்மறை ஆற்றல்களால் நமக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் இருக்கிறது.

Also Read: Fiber Rich Foods!  தினமும் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்! ஒரு நாளைக்கு எத்தனை கிராம் நார்ச்சத்து தேவை?

இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மண் கலையம் வேண்டும். ஒரு லிட்டர் அளவு கொள்ளளவு இருக்கக்கூடிய மண் கலையம் இருந்தால் போதும்.

இந்த மண் கலையத்திற்குள் காதோலை கருகமணி – 2,
பச்சரிசி – ஒரு கைப்பிடி அளவு,
நவதானியம் – 100 கிராம்,
விரலி மஞ்சள் – 2,
கற்கண்டு – ஒரு கைப்பிடி அளவு,
கல் உப்பு – ஒரு கைப்பிடி அளவு,
நவரத்தின செட் – ஒன்று,
பஞ்சலோக செட் – ஒன்று,
சங்கு – ஒன்று,
பச்சை கற்பூரம் மூன்று துண்டு இவை அனைத்தையும் போட வேண்டும். பிறகு குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

“ஓம் ஸ்ரீம் குலதெய்வம் நமஹா தன தானிய லட்சுமியை வசி வசி நமஹா”

இதில் குலதெய்வம் என்று வரும் இடத்தில் குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் குலதெய்வம் என்றே கூறலாம். இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.

முதல் வாரம் நாம் இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு அந்த மண் கலையத்தை மூடி வைத்துவிட வேண்டும். மறுபடியும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இதை திறந்து வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 11 வாரங்கள் செய்து முடித்த பிறகு இதில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை பொடி செய்து பசு மாட்டிற்கோ அல்லது எறும்புகள் இருக்கும் இடத்திலோ போட்டு விட வேண்டும்.

Also Read: தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

மண் கலயத்தை தவிர்த்து மீதம் இருக்கும் காதோலை கருகமணி, நவரத்தின செட்டு, பஞ்சலோக செட்டு, சங்கு இவை அனைத்தையும் கோவில் உண்டியலில் சேர்த்து விடலாம். இப்படி நாம் செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து குலதெய்வம் நம்முடைய வீட்டிற்குள் வரும். குலதெய்வத்தோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த ஒரு பரிகாரத்தை நாம் முழுமனதோடு குலதெய்வத்தை நம்பி செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் குலதெய்வம் நம்முடைய வீட்டிற்குள் வந்து நிரந்தர வாசம் செய்யும்.

இதனிடையே, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது அங்கிருந்து கொண்டு வரும் ஒரு பொருள்தான் நம் வீட்டை சண்டை சச்சரவுகள் இன்றி பணக்கஷ்டங்கள் வராமல் நிம்மதியாக வைத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. அந்தப் பொருள் குலதெய்வம் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு கைப்பிடி மண் தான். குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் குடும்பத் தலைவரும் தலைவியும் இணைந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் புனித மண்ணை மஞ்சள் நிற துணியில் போட்டு முடிந்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த முடிச்சை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூளும் கலந்து வைக்க வேண்டும். ஒரு செம்பு தகட்டில் உங்களுடைய குலதெய்வம் பெயரை எழுதி, அந்த செம்புத்தகட்டையும் பூஜை அறையில் இருக்கும் மண்ணோடு மஞ்சள் துணியில் வைத்து கட்டி வையுங்கள்.

Also Read: ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2

யார் கையும்படாத உயரமான இடத்தில் அந்த முடிச்சை வைத்து விட வேண்டும். நாள்தோறும் முடிச்சுக்கும் சேர்த்து ஊதுவத்தி, தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் புதிய மண்ணை கொண்டு வரலாம். வீட்டில் இருக்கும் பழைய மண்ணை வீட்டு தோட்டத்திலோ அல்லது மண்பாங்கான வேற இடத்திலோ கொட்டி விட வேண்டும். இப்படி குலதெய்வ கோயிலில் இருந்து நாம் கொண்டுவரும் மண்ணில் குலதெய்வம் குடியிருக்கும் என்பது ஐதீகம்.

உங்கள் வீட்டில் தீராத கஷ்டங்கள் ஏற்படும் போதும் மனக்குறைகள் இருக்கும் போதும் குலதெய்வ கோயிலுக்கு உங்களால் செல்ல முடியாவிட்டால் இந்த முடிச்சில் இருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் விபூதியாக பூசி குல தெய்வத்தின் பெயரை சொல்லுங்கள். உங்கள் கஷ்டங்கள் தீரும். இதை நம்பிக்கை இருப்பவர்கள் மனதார நம்பி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

With Inputs Dheivegam.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry