ஆன்லைனில் EB பில் கட்ட போறீங்களா? எச்சரிக்கை..! எஸ்.எம்.எஸ். லிங்க்கை கிளிக் செய்து செலுத்தினால் பணத்தை இழப்பீர்கள்!

0
62
Electricity Bill scam alert: TNEB asks consumers to beware of messages asking to clear EB bill.

மின் கட்டணத்தை (Electricity Bill) நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்துவோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) முக்கியமான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி 83 சதவிகித கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.30 கோடிக்கு மேல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரித்து வருகிறது. நெட் பேங்கிங், பாரத் பில் பேமண்ட் சிஸ்டம், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், கட்டண நுழைவாயில்கள், டெபிட்/கிரெடிட் கார்டுகள், வங்கி கவுன்டர்கள் உள்ளிட்டவை மூலம் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதை மின்வாரியம் எளிதாக்கியுள்ளது. இந்த வசதிகள் நுகர்வோருக்கு விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், கட்டணங்களை பெறும் திறன் 99 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் அதிகம்.

Also Read : வரலாற்றில் பல் மருத்துவம்! 7000 ஆண்டுகளுக்கு முன்பே ரூட் கேனால்(Root Canal) செய்து அசத்தியுள்ள முன்னோர்கள்!

அனைத்து தொழிற்சாலைகள் உயர் அழுத்த நுகர்வோர் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். 2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் டிஜிட்டல் சேனல்கள் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்காக ரூ.50,217 கோடி வசூலித்துள்ளது. இது 2022-23ல் வசூலிக்கப்பட்ட ரூ.38,329 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகம். இந்நிலையில், EB கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கு முன்பு, டான்ஜெட்கோவின் எச்சரிக்கை பற்றி அறிய வேண்டியது மிக அவசியம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எச்சரிக்கை செய்தியில், தமிழ்நாட்டில் மீண்டும் போலி மின்சார மின் கட்டண SMS மூலம் (Fake EB bill payment online SMS alert), வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் ஸ்கேம் தொடர்கிறது. குறிப்பாக, ”மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கிறது. உங்கள் மின்சார இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும். உடனே கட்டணத்தை செலுத்த இந்த லிங்க்கை(link) கிளிக் செய்யவும்” என்று உங்கள் மொபைல் எண்ணிற்கு ஏதேனும் எஸ்எம்எஸ் வந்தால், அவற்றை புறக்கணிக்கவும். மின் கட்டணம் தொடர்பான SMS-கள் மீண்டும் உலா வருவதினால் கவனமுடன் இருக்க வேண்டும்.

Also Read : கட்டட அனுமதி கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு! ஆயிரம் சதுர அடி கட்டடம் கட்ட ரூ.60,000 கூடுதல் செலவு என்பதால் அதிர்ச்சி!

இந்த ஏமாற்று எஸ்எம்எஸ் உடன் வரும் ‘லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் மின் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்’ என்ற அறிவுரையுடன் இந்த எஸ்எம்எஸ் (EB bill SMS scam) உலா வருகிறது. மெசேஜ்ஜில் இருக்கும் லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தும் நுகர்வோர் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எஸ்எம்எஸ் மோசடியில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் SMS உடன் வரும் லிங்க்கை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். அதேபோல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர அழைப்பு எண்ணையும் அழைக்காமல் தவிர்க்க வேண்டும். TANGEDCOவின் அதிகாப்பூர்வ இணையதளம் வழியாக கட்டணம் செலுத்துவது பாதுகாப்பானது. உங்கள் சந்தேகங்களுக்கு TANGEDCOவின் இலவச அழைப்பு எண் ஆன 1930ஐ அழைக்கலாம்.” என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry