ஒரு நபரின் பணப் பரிவர்த்தனை எவ்வாறு உள்ளது? எவ்வாறு பணத்தைக் கையாளுகிறார் என்பதை வங்கிகளுக்குத் தரும் அமைப்பே சிபில்(CIBIL – Credit Information Bureau (India) Limited). கடன்கள் தருவதற்கு வங்கிகள் முக்கியமாக எதிர்பார்ப்பது நல்ல கிரெடிட் ஸ்கோர்களைத் தான். கிரெடிட் ஸ்கோரை அல்லது சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் நபர்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்று வங்கிகள் யோசித்துதான் முடிவு எடுக்கும்.
சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும்போது, உங்கள் கடன் விண்ணப்பத்தினை வங்கிகள் நிராகரிப்பதற்கு அதுவே பிரதான காரணமாகலாம். சிபில் ஸ்கோரை எப்படி அதிகரிப்பது? என தெரிந்துகொள்வோம். சரியான நேரத்தில் பணம் செலுத்துதல்: வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் என எந்தக் கடனாக இருந்தாலும் சரி, கிரெடிட் கார்டு EMI-யாக இருந்தாலும் சரி, திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படவே கூடாது.
EMI செலுத்த வேண்டிய தேதியை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், ஒரு நாள் முன்னதாகவே செல்போனில் ரிமைண்டர்களை அமைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். இல்லையேல் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் முறையை பின்பற்றுங்கள். இதன் மூலம் சரியான நேரத்தில் பணம் செலுத்தப்பட்டு சிபில் ஸ்கோர் சீராக இருக்கும்.
உங்கள் வங்கி அறிக்கைகளை தவறாமல் சரி பார்ப்பது உங்கள் நிதி நலனுக்கு மட்டுமல்லாமல் கிரெடிட் ஸ்கோரையும் நல்ல முறையில் வைத்திருக்க உதவும். ஏதேனும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடந்திருப்பது போல தோன்றினால் அது பற்றி உங்கள் வங்கிக் கிளையில் உடனே புகார் அளியுங்கள்.
Also Read : மருத்துவ குணம் நிறைந்திருக்கும் வெள்ளை பூசணி ஜுஸ்..! மந்திர மருந்தில் ஒளிந்திருக்கும் நம்ப முடியாத நன்மைகள்!
உங்கள் கிரெடிட் கார்டில் கடன் வரம்பை முழுவதுமாக தீர்த்து விட்டு மீண்டும் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க விண்ணப்பிப்பது பொறுப்பில்லாமல் நீங்கள் செலவு செய்வதை குறிக்கிறது. இதனால் உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையலாம். எனவே கட்டுக்குள் செலவு செய்து பழகுங்கள். சிலர் ஒரு கிரெடிட் கார்டு வைத்துக் கொண்டே இன்னொரு கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள். இதுபோன்ற நடத்தையின் காரணமாகவும் கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
கடன் பயன்பாட்டு விகிதத்தை குறைப்பது (Credit Utilization Ratio) அவசியமானது. உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டு விகிதம் 30% க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது, உங்களுடைய Credit Limit ₹1,00,000 என்று வைத்துக்கொண்டால், அதிகபட்சம் 30% (30,000) மட்டுமே செலவு செய்ய வேண்டும். சில நேரங்களில் இதைத்தாண்டி செல்லும் போது சிபில் ஸ்கோர் குறைந்து விடும். இதைத்தவிர்க்க அடுத்த மாதங்களில் இத்தவறை சரி செய்து விட வேண்டும். மேற்கூறியது பெருங்குற்றமல்ல ஆனால், உடனடியாகச் சரி செய்து கொண்டால், ஸ்கோர் திரும்ப உயர்ந்து விடும். தேவையற்ற கிரெடிட் கார்டுகளை ரத்து செய்துவிடுங்கள்.
உங்களுடைய மொத்த கடன் அளவு. உதாரணத்திற்கு, 30,000 சம்பளம் வாங்குகிறவர் என்றால், மாத தவணையாக அதிகபட்சம் ரூ.14,000 செலுத்துகிற அளவிற்கு கடன் வாங்கலாம். 30,000 சம்பளத்தில 25,000 அளவிற்கு, மாத தவணை செலுத்த கடன் வாங்கினால் உங்களின் CIBIL SCORE குறையும்.
கடன்களை 2 வகையாகப் பிரிக்கலாம். Secured Loan, Unsecured Loan. Secured Loan என்பது வீட்டுகடன், வாகன கடன் போன்றவை.. Unsecured loan என்பது, credit card கடன், personal loan போன்றவை. இவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். Secured loan அதிகம் இருப்பபதால் பிரச்சனை இல்லை. அதிக கடன், அதிக கிரெடிட் கார்டுகள் பெறுவது, குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்குவது, கிரெடிட் கார்டு விண்ணப்பித்த பிறகு ரிஜெட்க் ஆவது போன்றவைகளால் சிபில் ஸ்கோரை பாதிக்கப்படும். இதை எல்லாம் குறைத்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.
https://www.experian.in/ தளத்தில் இலவசமாக சிபில் ஸ்கோரை பார்க்கலாம். CRED பயன்படுத்துவராக இருந்தால், மாதம் ஒருமுறை இலவசமாகப் பார்க்கலாம். இவையல்லாமல் Paytm, Gpay லும் இலவசமாகப் பார்க்கலாம். நிறுவனத்துக்கு நிறுவனம் சிபில் ஸ்கோர் மதிப்பீடு மாறுபடும். https://www.cibil.com/ தளத்தில் சரியான விவரங்களைப் பெறலாம் ஆனால், கட்டணம் உண்டு.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry