வெண்டைக்காயின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்! Crispy Lady Finger Roast Recipe: Easy and Delicious!

0
98
Research has shown that bhindi contains higher amounts of antioxidants compared to other vegetables. Antioxidants prevent oxidative damage to cells and hence lower the risk of cancer. The high fiber content maintains a healthy digestive system and prevents colon cancer.

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவார்கள். ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன.  கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த கொழகொழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.

Also Read : ‘இந்த’ பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிடவே சாப்பிடாதீங்க..! Side Effects of Ladies Finger!

ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிகமுள்ள வெண்டைக்காயை “ஹெல்த் டானிக்’ என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் தவிர்க்கக் கூடியவை.

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

Also Read : பப்பாளி காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? Incredible Health Benefits of Unripe Papaya!

எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும்தான். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே. வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும், கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும்.

குழந்தைகளுக்கு வெண்டைக்காய் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்க நினைத்தாலும், சுவை காரணமாக எது உடலுக்கு நல்லதோ அதை அவர்கள் விரும்புவதில்லை. வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு ஆகியவற்றை தவிர்க்கும் குழந்தைகள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்களுக்கு பிடித்த வகையில் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் வெண்டைக்காய் குர்குரே செய்து கொடுத்தால் கண்டிப்பாக ஒருபிடி பிடிப்பார்கள். வெண்டைக்காய் ரோஸ்ட் ரெசிபியை தெரிந்துகொண்டு குழந்தைகளுக்கு அதை செய்துகொடுத்து அசத்துங்கள். இதை வெண்டைக்காய் குர்குரே என்றும் அழைக்கிறார்கள்.

Also Read : ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை 2029 முதல் அமல்படுத்த திட்டம்! 17 மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கும் குறைவான ஆட்சியே இருக்கும்!

வெண்டைக்காய் ரோஸ்ட் செய்யத் தேவையானவை :

  • வெண்டைக்காய்
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • உலர் மாங்காய் பொடி
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • மஞ்சள் தூள்
  • சீரகத் தூள்
  • மல்லித் தூள்
  • சாட் மசாலா
  • கடலெண்ணெய்

வெண்டைக்காய் ரோஸ்ட் செய்முறை :

  • அரை கிலோ வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் வெயிலில் காய விடவும்.
  • தண்ணீர் நன்கு உறிஞ்சிய பிறகு வெண்டைக்காயில் உள்ள விதைகளை எடுத்து நீளவாக்கில் வெட்டவும். ஒரு சொட்டு தண்ணீர் அல்லது ஈரத்தன்மை இருந்தால் கூட மொறுமொறுப்பு கிடைக்காது; ரோஸ்ட் போலவும் இருக்காது.
  • இதனுடன் தலா ஒரு கப் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்ததாக உலர் மாங்காய் பொடி ஒரு ஸ்பூன், சாட் மசாலா ஒரு ஸ்பூன் சேருங்கள்.
  • சாட் மசாலா இல்லையென்றால் கரம் மசாலா பயன்படுத்துங்கள். அதுவே போதுமானது.
  • இப்போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சீரகத் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் சேருங்கள்.
  • இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். மசாலாப் பொருட்கள் வெண்டைக்காயில் ஊறட்டும்.
  • இதனிடையே கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடாகி விட்டதா என ஒரு வெண்டைக்காய் போட்டு பார்க்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து வெண்டைக்காயை உதிரி உதிரியாக எண்ணெயில் போடுங்கள்.
  • மிதமான சூட்டில் 3-4 நிமிடங்களில் வெண்டைக்காய் ரோஸ்ட் அல்லது குர்குரே தயாராகிவிடும். ஆரம்பத்தில் நீக்கிய விதைகளை எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
  • இதை நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரத்து ஸ்நாக் அல்லது மதிய வேளையில் குச்சி சிப்ஸ் போல கலவை சாதங்களுடன் கொடுக்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry