இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுகாதாரத் துறையில் பிளாக் விரிவாக்க பயிற்றுநர், குடும்ப நல உதவியாளர், சுகாதார பெண் பார்வையாளர், குழந்தை நல அதிகாரி போன்ற பணியிடங்களில் 75% மேல் பற்றாக்குறை இருக்கிறது. இரண்டாம்நிலை சிகிச்சை மையங்களில் மருத்துவ மற்றும் உதவி மருத்துவ பணியாளர்கள் தேவைக்கு ஈடாக இல்லை.
முதன்மை சிகிச்சை மையங்களில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் காலிப்பணியிடங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மையங்களை ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, நகரப் பகுதிகளில் பணியாற்ற விரும்புவதே காரணமாக இருந்தது.
Also Read : மருத்துவமனைகள் இருந்து என்ன பயன்? போதிய மருத்துவர்கள் இல்லையே..!
மார்ச் 2022ல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் உதவி மருத்துவ பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் முறையே 22%, 6% மற்றும் 44% ஆக இருந்தன. மருத்துவ பணியாளர்களை நிரப்ப தனி வாரியம் அமைத்தபோதும் முன்னேற்றம் இல்லை.
மேலும், இந்திய மருந்துவம் மற்றும் ஹோமியோபதி துறை கீழ் உள்ள சுகாதார மையங்களில் பெருமளவு காலிப்பணியிடங்கள் இருக்கிறது, இதனால் மாறுபட்ட மருத்துவ முறைகளைப் பிரபலப்படுத்துவது தடைபடுகிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் முழுமையாக வழங்கப்படாத அல்லது குறைவாக வழங்கப்படும் நிலை உள்ளது.
Also Read : மோசமான நிலையில் தமிழக சுகாதாரத்துறை! அமைச்சரின் நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரிப்பு!
குறைந்த காலக்கெடுவுடைய மருந்துகளை வாங்குவதில் குறைபாடு, தரம் மற்றும் விநியோக குறைபாடுகளுக்காக விநியோகத்தார்களை கருப்புப்பட்டியலில் சேர்க்காதது உள்ளிட்ட சிக்கல்களும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (TNMSC) தரக்குறைவான மருந்துகளை விநியோகித்தது தெரிகிறது. அதேபோல், TNMSC மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையே தேவைகளை மதிப்பீடு செய்வதிலும், தேவையான உபகரணங்களை மட்டுமே வாங்குவதிலும் முரண்பாடு இருக்கிறது.
அடிப்படை சுகாதார சேவைகள் பாதிப்பு
CAG அறிக்கையின் படி, நோயாளிகள் காத்திருக்கும் இடங்கள், பதிவு கவுன்ட்டர்கள், குடிநீர், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததும், துணி துவைத்தல், சமையல், பிணவறை போன்றவற்றின் பற்றாக்குறைகளும் மாநில அரசு மருத்துவமனைகளில் சுகாதார தரத்தை பாதிக்கின்றன.
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ICU) மற்றும் அறுவை சிகிச்சை அறைகளின் குறைவுகள் முறையே 20% முதல் 65% மற்றும் 20% முதல் 83% வரை இருந்தன. சுகாதாரத்திற்கான செலவினம் தேசிய சுகாதார கொள்கையின் பரிந்துரை அடிப்படையில் 8% செலவிடப்பட வேண்டிய இடத்தில், 3.99% முதல் 5.99% வரை மட்டுமே இருந்தது. இது தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்திற்கான பல்வேறு சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.
முதியோருக்கான தேசிய மையத்திற்கு கட்டப்பட்ட கட்டிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேவையான மனிதவளம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படாததால் தாமதம் ஏற்படுகிறது. பட்ஜெட்டில் எட்டு சதவீதத்தை சுகாதாரத்திற்காக ஒதுக்க வேண்டும் என்ற தேசிய சுகாதாரக் கொள்கையின் பரிந்துரைக்கு எதிராக அரசாங்கம் தனது பட்ஜெட்டில் சுமார் ஐந்து சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) ஆகியவற்றிடம் கையிருப்பில் உள்ளது.
மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் பிரசவித்த தாய்மார்களில் 46 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு அல்லது ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிரம் திட்டத்தின் கீழ் அவுட்சோர்சிங் வாகனம் மூலம் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த 26 சதவீதம் பேருக்கு வழங்கப்படவில்லை.
Also Read : கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது? வாசலில் எத்தனை விளக்குகள் வைக்க வேண்டும்?
நிதி கிடைத்த போதிலும், ‘அனீமியா முக்த் பாரத்’(ரத்தசோகை நோயின் பாதிப்பை ஆண்டுக்கு 3 சதவீதம் குறைப்பதற்காக அனீமியா முக்த் பாரத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது) திட்டத்திற்கு விடுவிக்கப்பட்ட நிதியில் ஆறு சதவீதமும், ‘பிரசவ அறை மற்றும் தர மேம்பாட்டு’க்கான திட்டத்த்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 14 சதவீதமும் மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1997-ன் கீழ் விதிகள் வகுப்பதில் 21 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேசிய அங்கீகார வாரியம் மற்றும் தேசிய தர உத்தரவாத தரநிலைகளின் கீழ் சான்றிதழ் பெறுவதில் அரசு சுகாதார அமைப்புகள் முனைப்புடன் செயல்படவில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry