நீங்க தண்ணி அடிப்பீங்களா? 28 நாள் சவாலுக்கு தயாரா..? ஆச்சரியப்பட வைக்கும் ரிசல்ட்!

0
156
Witness the transformative power of 28 days of sobriety. Explore the remarkable physical benefits, including improved liver function, better skin, and enhanced overall health.

மதுவை எப்படி, எவ்வளவு, எத்தனை நாட்கள் அருந்தினாலும் கேடுதான். அதிலும் ஆண்களை விட பெண்கள் மதுவால் மிக எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பலரும் தாங்கள் அருந்தும் மது நேரடியாக வயிற்றுக்குள் சென்று அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதாகவே நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், போகிற வழியில் உள்ள உடல் பாகங்களை அது எந்தளவு பாதிக்கிறது என்பது குறித்து அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Also Read : நீங்க சிகரெட் பிடிப்பவரா? புற்றுநோயில் இருந்து தப்பிக்க இந்த 7 டெஸ்ட்டும் உடனே செஞ்சுக்கோங்க..!

ஆல்கஹால் நேரடியாக வயிற்றைத் தாண்டி சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளுக்குச் செல்கிறது. அங்கு ஆல்டிகைடு என்ற சேர்மமாக ஆல்ஹகால் உடைக்கப்படும். வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள ரத்தம் அனைத்தும் கல்லீரல் வழியாகச் சென்றே, உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும். அந்தச் சமயத்தில் உணவில் உள்ள உடலுக்கு தேவையான சத்துக்களைப் பிரித்து ரத்தம் வழியாக முழு உடலுக்கும், கழிவுகளை மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேயும் அனுப்புவது கல்லீரலின் வேலை.

Liver, illustration. Getty Image.

இந்த நிலையில், கல்லீரலுக்குச் சேதத்தை உண்டாக்கும் ஆல்டிகைடு, ரத்தம் வழியாக கல்லீரலை அடைகிறது. எனவே மிகக் குறைவான நேரத்தில் அதிகமாக ஆல்கஹாலை அருந்தும்போது இந்தச் சேர்மம் அதிமாகி கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டு செல்லும். எனவே, மது அருந்துபவர்களின் கல்லீரல் குறிப்பிட்ட அளவு பாதிப்படைந்திருக்கும்.

குறைவாக அல்லது அதிகமாக என எப்படி மது அருந்தினாலும் திடீரென்று கல்லீரல் செயலிழந்து விடும். ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30 மி.லி. இதை தினசரி அருந்தினாலும் பெரும்பாலும் தீங்கு ஏற்படாது. ஆனால், அதற்கு மரபணு ரீதியாகவே உங்கள் கல்லீரல் நலமாக இருக்க வேண்டும். வேறு எந்தப் பிரச்சனைகளாலும் பாதிப்பு இல்லாத கல்லீரலாக இருக்க வேண்டும்.

Ready to prioritize your health? Quitting alcohol for 28 days can have a profound impact on your body. Learn about the amazing physical changes you can expect. Getty Image.

நீங்கள் முதலில் குடிப்பதை நிறுத்தும்போது, உங்கள் உடல் நச்சுத்தன்மையை நீக்கத் தொடங்கும். இது கவலை, நடுக்கம், வியர்வை மற்றும் குமட்டல் உள்ளிட்ட திரும்பப் பெறுதல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஆல்கஹால் திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.

28 நாட்கள் தொடர்ந்து மது அருந்தாமல் இருந்தால் உடலில் என்ன நடக்கும் என்று தெரியுமா? உண்மையில், மது அருந்துபவர்களில் பலர் மதுப்பழக்கத்தில் இருந்து வெளியேறவே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான வழிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. குடிப்பதை நிறுத்தினால், உங்கள் மனதிலும் உடலிலும் பல்வேறு விஷயங்கள் நடக்கும். இருப்பினும், இந்த விளைவுகளின் தன்மை மற்றும் தீவிரம் நீங்கள் குடிக்கும் அளவு, தினமும் குடிக்கிறீர்களா என்பதைப் பொறுத்து மாறுபடும்.

Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

28 நாட்கள் மது அருந்தாமல் இருந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். 28 நாட்கள் தொடர்ந்து மது அருந்தாமல் இருப்பதற்கான சவாலை ஏன் நீங்கள் ஏற்கக்கூடாது? இந்தச் சவாலை ஏற்றால் உங்கள் ஆரோக்கியத்தில் இதன் நேர்மறை தாக்கம் தெளிவாகத் தெரியும். மதுவை நிறுத்திய முதல் வாரத்திலேயே தேவையற்ற பசி குறையும். இதன் விளைவாக, இனிப்பு சாப்பிடும் போக்கு சிறிது அதிகரிக்கும். இருப்பினும், படிப்படியாக அது குறையும்.

Getty Image

இரண்டாவது வாரத்தில் இருந்து நீங்கள் நன்றாக தூங்குவீர்கள். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் படிப்படியாக மறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்குக் கூட ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். அதேபோல், மது அருந்தும் பழக்கத்தில் இருந்து வெளியேறிய மூன்றாவது வாரத்தில், உங்கள் கல்லீரல் குணமடையத் தொடங்கும். இதன் விளைவாக, செரிமானம் முன்பை விட நன்றாக இருக்கும். செரிமானமின்மை காரணமாகச் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அது மெதுவாக குணமாகும். அத்துடன், ருசியை உணரும் திறனும் அதிகரிக்கும்.

மதுப்பழக்கத்தை விட்ட நான்காவது வாரத்தில் உங்கள் எடை கட்டுக்குள் வரத் தொடங்கும். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், அது கட்டுக்குள் வரும். உங்களுக்கு இதயப் பிரச்சனைகள் இருந்தால், நிலைமை முன்பை விட சீராகும். நீங்கள் முன்பை விட ஃபிட் ஆக உணர்வீர்கள்.

Image Courtesy : sleepfoundation

குடிப்பதை நிறுத்தும்போது நீங்கள் அனுபவிக்கும் மனநல மாற்றங்களில், திரும்பப் பெறுதல்(Withdrawl Symptem), தூங்குவதில் சிரமம், எரிச்சல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தெளிவான சிந்தனை ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் சில காலத்திற்குச் சங்கடமானதாக இருந்தாலும், மது அருந்துவதைத் தவிர்க்கும் போது இறுதியில் மேம்படத் தொடங்கும்.

மதுவை கைவிடுவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தூக்கமின்மை. இதற்குக் காரணம், ஆல்கஹால் ஒரு மயக்க மருந்தாகச் செயல்படுவதால், அது உங்கள் உடலில் இல்லாதபோது, நீங்கள் தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால், ஆல்கஹால் பயன்பாட்டைக் குறைப்பது காலப்போக்கில் தரமான தூக்கத்தை மேம்படுத்த உதவும்.

Disclaimer: This information is for general knowledge and informational purposes only and does not constitute medical advice.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry