கும்பகோணத்திலிருந்து கேம்பிரிட்ஜ் வரை! உலகம்போற்றும் கணிதமேதையின் 133-வது பிறந்தநாள்!

0
284

கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினமான இன்று, தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், விளம்பர வெளிச்சங்களில் மின்னும் அரசியல் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களை அறிந்துள்ள நம் சமூகம், நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை போற்றுவது இல்லை என்பது கசப்பான உண்மை.

சீனிவாச ஐயங்கார் ராமானுஜனின் வாழ்க்கையை, தன்னம்பிக்கையின் வரலாறாகத்தான் பார்க்க வேண்டும். 1887 டிசம்பர் 22 அன்று ஈரோட்டில் பிறந்தவ சீனிவாச ராமானுஜன், நிதி உதவி பெற்று கும்பகோணம் உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். அப்போதே கணித இணைப்பாடு (ஃபார்முலா) பலவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவித்து ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார்.

எப்போதும் நோட்டு, பெரிய பலகை வைத்துக்கொண்டு கணக்குப் போட்டுக்கொண்டே இருந்த அவர், பள்ளியில் இருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தும் இது தொடர்ந்தது. கணிதப் பேராசிரியர் என்.ராமானுஜாச்சாரியார், இவரது நோட்டை வாங்கிப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். இதே கல்லூரியின் முன்னாள் கணிதப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார்தான், ‘உனது கணித ஆராய்ச்சிக் குறிப்புகளை இங்கே யாரிடமும் காட்டி நேரத்தை வீணடிக்காதே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புஎன்றனர். ராமானுஜன் திறமை, உலகத்துக்கு பரவியது இப்படித்தான்.

எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்என்று, லண்டன் கணித மேதை ஜி.எச்.ஹார்டிக்கு ராமானுஜன் எழுதிய கடிதம் அவரது வறுமை நிலையை உணர்த்துகிறது.

1909-ல் ராமானுஜனுக்கு திருமணமானது. மனைவி ஜானகியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். வேலை பார்த்துக்கொண்டே ஆற்றிய கணிதப் பணிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது.

அங்கு சென்ற ராமனுஜன், உதவித்தொகையின் மூலம் டிரினிடாட் கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார்.  சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கணித தேற்றங்களை எழுதி கலக்கினார். ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில்ராமானுஜன் கணிதம்என்ற புகழ்பெற்ற நூலானது.

வறுமை காரணமாக மதராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜன் வேலைக்குச் சேர்ந்தபோது உதவிய பிரான்சிஸ் ஸ்பிரிங் முதல், லண்டனுக்கு அவரை வரவழைத்துக்கொண்ட ஜி.எச்.ஹார்டி வரை எத்தனையோ ஆங்கிலேயர்கள் ராமானுஜனின் வாழ்க்கைக்கு உதவியுள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். வறுமையைப் புலமையால் வென்ற ராமானுஜனை 1920-ல், 33 வயதில் காசநோய் காவு வாங்கியது. அவரது நோட்டுப் புத்தகங்கள் 100 ஆண்டுகள் கழித்தும், கணித மேதைகளால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry