பக்ரீத் தளர்வு எதிரொலி! கேரளாவில் மீண்டும் கொரோனா உச்சம்! ஓணம் பண்டிகை கொண்டாட கடும் கட்டுப்பாடு!

0
29

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாகியிருக்கும் கேரளாவில், தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து வருகிறது. பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கேரளாவில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி தினசரி பாதிப்பு 20,000த்தைக் கடந்து வருகிறது. மலப்புரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் மாவட்டங்களில் தினசரி ஆயிரத்தை கடந்து பாதிப்பு பதிவாகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பக்ரீத் பண்டிகைக்காக 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என்றும் கூறியிருந்தது.

இதுகுறித்து கவலை வெளியிட்ட இந்திய மருத்துவர்கள் சங்கம், “கேரளாவில் பெருந்தொற்று அதிகமாக இருக்கும் நிலையில், பக்ரீத்துக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வை அறிவித்திருப்பது தேவையற்றதும் பொருத்தமற்றதும் ஆகும். எனவே தளர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்என்று கூறியிருந்தது. ஆனால், கேரள இதை கண்டுகொள்ளவில்லை. கடந்த 21-ந் தேதி பக்ரீத் கொண்டாடப்பட்ட நிலையில், தளர்வு எதிரொலியாக, நாட்டின் மொத்த பாதிப்பில், பாதிக்கும் அதிகமானோர் கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.   

இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கான கட்டுப்பாடுகளை கேரள அரசு கடுமையாக்கி உள்ளது. ஒன்றாக கூடுதல், பண்டிகை கொண்டாட்டங்கள், உறவினர்கள்நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லுதல் ஆகியவற்றை இந்துக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார். கோவிட் தடுப்பு வழிகாட்டுதல்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மதச்சார்பின்மை பேசும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, மருத்துவ கவுன்சிலின் எதிர்ப்பை மீறி பக்ரீத் பண்டிகைக்காக தளர்வு அறிவித்துவிட்டு, இப்போது, இந்துக்கள் ஓணம் கொண்டாட கட்டுப்பாடுகளை விதிப்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க தயார் எனக் கூறும் கேரள மாநில இந்துக்கள், அனைத்து சமூகத்தையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்க அரசு தவறுகிறது என குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து மேலும் பேசிய அவர்கள், “நாங்கள் சகோதரர்களாகப் பழகினாலும், பாரபட்சமான நடவடிக்கைகளால், அரசு எங்களுக்குள் மனக்கசப்பை ஏற்படுத்தப் பார்க்கிறது. உத்தரப்பிரதேச அரசு கன்வார் யாத்திரைக்கு அனுமதி அளித்த நிலையில், இதுகுறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், யாத்திரைக்கும் அனுமதி மறுத்தது.

ஆனால், கொரோனா உச்சத்தில் இருக்கும்போது, பக்ரீத் பண்டிகைக்காக கேரள அரசு அறிவித்த தளர்வை உச்ச நீதிமன்றம் கூட கண்டுகொள்ளவில்லை.  தற்போது பரவல் மேலும் அதிகரித்துவிட்டது, மூன்றாவது அலை பயமுறுத்துகிறது. இந்தச் சூழலில் அரசின் கட்டுப்பாடு தேவைதான், ஆனால், அது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கைஎன்று தெரிவித்தனர்.

பக்ரீத் தளர்வினால் அதிகரித்துள்ள பெருந்தொற்று பரவல், கேரளா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், மூன்றாவது அலை தொடங்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. கோயம்புத்தூர், சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்மீண்டும்கொரோனாபரவல்அதிகரித்துவருகிறது. இதன் எதிரொலியாக முக்கிய வணிக பகுதிகளை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள சாலை, ஜாம்பஜார் சாலை , அமைந்தகரை மார்க்கெட் சாலை, ராயபுரம் மார்க்கெட் சாலை உள்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளனசென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 3-ந் தேதி வரை பிரதான கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் தொடர்ந்து கூட்டம் சேர்ந்தால், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry