சங்கிகளை அண்டி, ஒன்றி பிழைக்க திமுக அச்சாரம்  போட்டாச்சு! டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்!

0
27

இனி மோடி அரசை அண்டி இருந்தால் மட்டுமேஆட்சி பிழைக்கும்என்ற நிலை உருவான பின்பு, எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே பணிந்தும், குனிந்தும் நடக்க திமுகவினர்  ஆயத்தமாகி விட்டதையே இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் படத்திறப்பு விழா வெளிப்படுத்துகிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் கடந்த நான்கு வருட  ’சங்கி எதிர்ப்பு வேடம்’  கலைந்து அப்பட்டமான சரணாகதியில் முடிவடைந்திருக்கிறது.  மோடி அரசிடம் திமுக அடைந்த சரணாகதி பற்றி விவாதம் செய்ய தமிழக ஊடகவியலாளர்களை எது தடுக்கிறது? இதுவே எடப்பாடியாகவோ அல்லது வேறு எவரது ஆட்சியாகவோ இருந்திருந்தால் கடந்த ஒரு வாரமாக எடுபிடி ஊடகவியலாளர்களால் மணிக்கணக்கில் விவாதங்கள் நடந்திருக்கும். ஆனால் அந்த போலி பெரியாரியவாதிகள் இப்போதெல்லாம் வாய் திறக்க மாட்டார்கள். சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் அவர்களுக்கு சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்பில் மாளிகைகள் கிடைத்த பின்பு அவர்கள் எப்படி வாய் திறப்பார்கள். எசமான் வீட்டு பிராணியாயினும் பிஸ்கட்டுகள் கிடைத்த பின்பு வாய் மூடி மௌனம் காக்கத்தானே வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 4 வருடத்தில் அதுவும் குறிப்பாக 2018-க்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டுமே முன்னிலைப் படுத்துவதிலும், அவர்களுடைய ஏவல் ஆட்களாக செயல்படுவதிலும் நடுநிலை வேஷம் தரித்த பிழைப்புவாத ஊழல் ஊடகவியலாளர்கள் போட்ட கூச்சல் பேச்சுகளுக்கு அளவே இல்லை. ஒரு மாநிலத்தின் அரசைஅடிமை அரசுஎன்று திமுகவின் தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனத்தை மட்டுமே அடிமட்டம் வரை கொண்டு போய் சேர்த்தார்கள். தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதாலேயே இன்னும் சில முக்கியமான சம்பவங்களை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

1998-99 காலகட்டங்களில் எந்த திமுக ஆட்சியின் கீழ்முஸ்லிம்கள்என்றாலேதீவிரவாதிகள்என முத்திரை குத்தி இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட போது புதிய தமிழகம் கட்சியின் அரவணைப்பால்  மட்டும் தான் அவர்களால் பாதுகாப்புடன் நிம்மதியாக இருக்க முடிந்தது என்பதையெல்லாம் மறந்துவிட்டு, நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது; மத்திய அரசு பாஜகவின் அரசாங்கம். எனவே மத்திய அரசின் சட்டத்தை ஆதரித்தால் அவர்கள் உற்ற நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்கும்சங்கிஎன்று முத்திரை குத்தி எதிர்ப்பது என்ற அடிப்படையில் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள் நெறிமுறைகளுக்கு மாறாக குனியமுத்தூர் இல்லம் மற்றும் மருத்துவமனை வரை வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

கச்சத்தீவை திமுக தாரைவார்த்த போது பறிபோகாத தமிழகத்தின் உரிமை; 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முள்ளி வாய்க்காலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது பறிபோகாத தமிழின உரிமை, நீட் தேர்வை ஆதரித்து  நாம் ஒரு கருத்துச் சொன்னதனால் தமிழக மக்களின் உரிமைகள் பறிபோனதாக திமுகவும், அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்ட கூலிப் பட்டாளங்களும் நமக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.

ஏறக்குறைய நான்காண்டு காலம் தமிழக மக்களை இவர்கள் சுடுமணலின் மேல் நடப்பது போன்ற ஒரு சூழலிலேயே வைத்திருந்தார்கள். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ்சங்கிகளின் அரசு, தமிழர்களைசிறுபான்மையினரை அழிக்க வந்த பாசிச பாஜக அரசே காரணம் என்று ஒரு மாய பிம்பத்தைக் கட்டமைத்து அதற்கான பிரச்சாரத்தை எந்த எல்லைக்கும் கொண்டு சென்றார்கள். அந்த வலையில் சிக்கியவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் இஸ்லாமியரும், கிறித்தவர்களுமே ஆவர்.

அப்படி கட்டி அமைக்கப்பட்ட பிம்பம் அவர்களுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றியை பறித்துக் கொடுத்தது.  2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 505 வாக்குறுதிகளுடன்  20க்கும் மேற்பட்ட கட்சிகளை கூட்டணி  சேர்ந்தும் தட்டுத்தடுமாறி ஆட்சியை அமைத்துக் கொண்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீட் ரத்து செய்யப்படும், இராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட 7 தமிழர்களையும் விடுவிப்போம்; பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி வளையத்திற்குள் கொண்டு வரப்படும், லிட்டருக்கு ரூபாய் ஐந்து குறைக்கப்படும்; தமிழகத்திற்கான நிலுவைத் தொகை 18,000 கோடி  பெற்றுத் தரப்படும்  போன்ற கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

முதல்வரான பின் பல்வேறு கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்ற ஸ்டாலின் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வெறும் கையோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர்களுக்கு ஒன்று மட்டும் மூன்று மாதத்தில் மிகவும் தெளிவாகிவிட்டது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்ற பாடத்தை நன்கு கற்றுக் கொண்டார்கள்.

இன்னும் மோடி ஆட்சி குறைந்தது மூன்று வருடத்திற்கு இருக்கும்.  மூன்றாண்டு  காலத்திற்கும் மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியை ஓட்டுவது கடினம். நேரடியாகக் காலில் விழுந்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே கதவைச் சாத்திக்கொண்டு காலில் விழுவது தான் ஒரே வழி என முடிவெடுத்துநூற்றாண்டு விழாஎன்ற பெயரில் ராம்நாத் கோவிந்த் அவர்களை அழைத்து இருக்கிறார்கள். இப்போழுது திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று?  பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா?

நான்காண்டு  காலம் ஆர்.எஸ்.எஸ், பாஜகக்கு எதிராக பேசிய வீராவசனங்களை நாடறியும். பாரத பிரதமரை கூடபாரத பிரதமர்என அழைக்காமல், இன்றுவரை இந்திய தேசத்தைஒன்றிய அரசுஎன கூப்பாடு போட கூடியவர்களுக்கு இன்று ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அமித்ஷா வேறு, மோடி வேறு; பாஜக அரசு வேறு; மத்திய அரசாங்கம் வேறு; சங்கிகள் வேறு; ஜனாதிபதி ரம்நாத் கோவிந்த் அவர்கள் வேறா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது ஒரு பழமொழி. அது திமுகவிற்கு நன்கே பொருந்தும்.

Also Read: குடியரசுத் தலைவர் எதற்காக வருகிறார்? நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா? கருணாநிதி உருவப்படத் திறப்புக்கா?

இன்று வரை சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல்ஒன்றிய அரசு  என அழைத்துக் கொண்டு மனம் கூசாமல் ஜனாதிபதி அவர்களை மட்டும் எப்படி அழைக்க முடிந்தது?  நீங்கள் உங்கள் ஆட்சிஅதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சங்கிகளை; சங்கி அரசை அண்டிப் பிழைக்கவும், தயார் ஆகி கொள்ளலாம். உங்களுக்கு இதெல்லாம் புதிது கிடையாது. ஏனெனில் அதற்கான விதையை  நடேச முதலியாரும், தியாகராயரும், டி.எம்.நாயரும் 1921-லேயே விதைத்துச் சென்று விட்டார்கள். அதனால் நீங்கள் நிறம் மாறுவது ஆச்சரியப்படும் விசயம் ஒன்றுமில்லை.

ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு வருத்தம் தான், நீங்கள் சங்கிகளுக்கு எதிராக போட்ட போலி நாடகத்தை முழுமையாக நம்பி ஏமார்ந்து போன தமிழக கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும், எண்ணற்ற தமிழக இளைஞர்களும் இனிமேலாவது விழித்துக் கொள்வார்களா? என்பதே நமது கேள்வி. வெற்றி பெறுவதற்காக எந்த பொய்யையும் பேசலாம்; எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்; ஏன் சிரித்துக்கூட கழுத்தறுக்காலம் என்றமாக்கியவல்லியின் அரசியல் பாடம் எல்லா காலகட்டத்திலும் கை கொடுக்காது என்பதை மறந்து விட வேண்டாம்என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry