ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களுடன் வரவுள்ள இந்த ஃபோனுக்கு இப்போதே ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ஐபோன் 13 சீரிஸ் வெளியாகிறது. இவை மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களை கொண்டதாக இருக்கும். iPhone 12-ன் நீள அகலத்திலேயே iPhone 13-ன் நான்கு மாடல்களும் அறிமுகமாகிறது.(5.4-inch iPhone 13 mini, 6.1-inch iPhone 13, 6.1-inch iPhone 13 Pro and 6.7-inch iPhone 13 Pro Max).
இதுவரை உள்ள ஐபோனின் மாடல்களை ஒப்பிடும்போது, 13-ன் அனைத்து மாடல்களிலும் போனின் முன்புறமுள்ள Notch சிறிதாக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களும் 120Hz LTPO ( Low-Temperature Polycrystalline Oxide – special kind of backplane technology designed for OLED screens and developed by Apple) டிஸ்பிளே கொண்டதாக இருக்கும். Portrait Video Mode, மேம்படுத்தப்பட்ட புதிய 5G Modem அறிமுகப்படுத்தப்படுவதால், பேட்டரி திறனும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. Faster A15 Bionic chip பயன்படுத்தப்பட்டுள்ளதால், போனின் செயல் வேகம் அதிகமாக இருக்கும்.
நட்சத்திரம் போன்ற வான் பொருட்களை படம்பிடிக்கும் Astro Photography feature ஐபோன் 13 மாடல்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 13 Pro மாடல்களில் Improved ultrawide lens பொருத்தப்படுகிறது. ProRes தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. Pro மாடல்களில் camera module பெரிதாகவும், Auto Focus-ம் இருக்கும்.(LiDAR-boosted camera) iPhone 13-ல் 64GB முதல் 512GB வரை Storage இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் 1TB வரை Storage கொடுக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. Wireless Speedம் அதிகரிக்கப்பட்டுள்ளது. iPhone 12ஐ ஒட்டி சற்று அதிகமாக விலை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. iPhone 13-ன் விலை ஏறக்குறைய 90,000 ரூபாயாக இருக்கலாம்.
இதனிடையே, SellCell என்ற நிறுவனம் சுமார் 3 ஆயிரம் ஆப்பிள் பயனாளிகளிடம் சர்வே நடத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வரவிருக்கும் புதிய மாடலுக்கு iPhone 13 என பெயரிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். 13 என்பது அதிர்ஷ்டம் இல்லாத எண் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry