பென்சன் விதிகளில் திடீர் மாற்றம்! அரசு ஊழியரின் உடன் பிறந்தவர்களும் இனி குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்!

0
88

அரசு ஊழியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவர் இனி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

பென்சன் விதிமுறைகளை திருத்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவரும் இனி குடும்ப பென்சன் பெற தகுதியானவர்கள் ஆவர்.  எனினும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன்பிறந்தவரின் மாத வருமானம், குடும்பப் பென்சனைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பப் பென்சன் பெற முடியும்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்துபோன மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் பிள்ளை/உடன்பிறந்தவர் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவர் குடும்பப் பென்சன் பெற தகுதியானவர்என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனம், அவர் வாழ்வாதாரம் பெற தடையாக இருந்தால் மட்டுமே குடும்பப் பென்சன் பெற முடியும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் பெற ஏற்கனவே ரூ.9,000+Dearness Relief என இருந்தது. அது தற்போது, ஓய்வூதியர் பெற்ற கடைசி ஊதியத்தின் 30 சதவிகிதம்+Dearness Relief என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வருமான வரம்புகளை தாராளமாக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry