சுப.வீ, நாஞ்சில் சம்பத் கோயபல்ஸ்கள்! ஈ.வெ.ரா. சொல்லியா சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார்? வளர்மெய்யறிவான் கடும் தாக்கு!

0
99

திருமண வீடாக இருப்பினும், துக்க வீடாக இருப்பினும், பெரியார் கம்பெனிஸ்டிக்கரைஒட்டிவிடுவதுதான் சுப.வீ போன்றவர்களின் வாழ்நாள் பணி என்று மூத்த ஊடகவியலாளரும், TNTV தமிழ் இணைய ஊடக நிறுவனருமான விஷ்வா என்கிற வளர்மெய்யறிவான் விமர்சித்துள்ளார்.

நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முந்தைய ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தார். ஆனால், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியையே தமிழ்நாடு நாள் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வலியுறுத்தினர். இதை ஏற்று ஜூலை 18-ந் தேதியையே தமிழ்நாடு நாள் என முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக இதனை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்த சுப. வீரபாண்டியன், “தமிழ் நாட்டிற்குதமிழ்நாடுஎன்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1955 அக்டோபர் மாதம் கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை முன்வைத்து, தியாகி சங்கரலிங்கனார் பட்டினிப் போர் நடத்தி 1956 அக்டோபரில் உயிர் துறந்தார். பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில், தி.மு.கழகமும், வேறு சில கட்சிகளும் பலமுறை தீர்மானங்களை முன்மொழிந்தன.

பிறகு நாடாளுமன்றத்தில், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த பூபேஸ் குப்தா அதே தீர்மானத்தைக் கொண்டு வந்த போது அறிஞர் அண்ணா அதனை மகிழ்ந்து வரவேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். இறுதியாக, தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு 1967 ஜூலை 18 அன்று, முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிய, அத்தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது. பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுச் சட்ட வடிவத்தையும் பெற்றது!எனவேதமிழ்நாடு நாள்என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜுலை 18″ என சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள மூத்த ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான், “சுப.வீ போன்றவர்களின் வாழ்நாள் பணி என்னவென்றால், அது திருமண வீடாக இருப்பினும் துக்க வீடாக இருப்பினும் தங்களின் பெரியார் கம்பெனிஸ்டிக்கரைஒட்டிவிடுவது. உண்மையில், வரலாற்றுத் தரவுகளின்படி, 1918 ம் ஆண்டே காங்கிரஸ்காரர்கள் தெலுங்கர்கள் அதிகம் உள்ள வட பகுதியை ஆந்திரா என்றும், தமிழர்கள் அதிகம் உள்ள தென் பகுதியை தமிழ்நாடு என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சோமசுந்தர பாரதியார்

சோமசுந்தர பாரதியார் 1937 ம் ஆண்டில், தமிழ்நாடு தமிழர்களுக்கே என்றும், தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று பெருமுழக்கம் எடுத்துப் போராடத் தொடங்கிவிட்டார். காங்கிரஸின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமையா, அகண்ட ஆந்திரம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதன் காரணமாகவே தமிழர்கள் அவருக்கு எதிரான, காங்கிரஸ் தலைமைக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினார்கள், செயல்பட தொடங்கினார்கள்.

1956 ல் சங்கரலிங்கனார் அறுபத்தி ஒன்பது நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் துறக்கிறார். இதற்கிடையில் 1955 அக்டோபர் மாதம் பெரியார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று குறிப்பிட்டதாக சுப வீரபாண்டியன் கூறுகிறார். அதற்கு முன்பாக பெரியார் எப்போது சொன்னார்?,அதற்குப் பின்பாக பெரியார் எப்போது சொன்னார்? என்பதை சுப வீரபாண்டியன் விளக்கமாட்டார்.

ஆக, சுப வீரபாண்டியன் ஒன்றை ஒத்துக்கொள்கிறார். 1955 ல் பெரியார் கோரிக்கை (மட்டுமே) வைத்தார் என்று கூறுகிறார். இவ்வாறு கோரிக்கை தவிர வேறு துரும்பைக்கூட பெரியார் அசைக்கவில்லை என்பதையும் சுபவீரபாண்டியன் உறுதிப்படுத்துகிறார். 1955 அக்டோபர் மாதமே பெரியார் இதனை எங்கே கூறினார் என்ற தரவுகளையும் சுப.வீ முன் வைத்தால் நன்றாக இருக்கும்.

நீதிக்கட்சி,  தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்குத்தமிழர் கழகம்என்று பெயர் வைக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் அனைவரும் எதிர்க் குரல் எழுப்பி அமைப்பை விட்டு விலகிய போதும்கூடதிராவிடர் கழகம்என்று விடாப்பிடியாக பெயர் வைத்தவர் ஈவெரா. தமிழர் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று கூறியபோது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டியவர் அண்ணா.

இதையெல்லாம்விட, சென்னையையும் திருத்தணிகையையும் மீட்பதற்காக மா.பொ.சி. போராடியபோதுவடக்கெல்லை போராட்டம் எதற்கு? அவை தெலுங்கர்களுக்குப் பாத்தியப்பட்டவை  என்று கூறியவர் பெரியார். இவர்களுக்கு எங்கே தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம்  உளப்பூர்வமாக வரப்போகிறது?!

தனது கட்டுரையில், “பெரியார் கோரிக்கை வைத்தார் என்றும், அந்தக் கோரிக்கையை ஏற்றே சங்கரலிங்கனார் 69 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார் என்பது போலவும்குறிப்பிடுவதுதான் சுப வீரபாண்டியன் போன்ற கோயபல்ஸ் பரப்புரையாளர்கள் மீது கோபம் வரக் காரணமாக இருக்கிறது.தமிழ் உண்மையின் மொழி. சுபவீரபாண்டியன்கள், நாஞ்சில் சம்பத்துகள் போன்றவர்கள், அழகு தமிழை பொய்ப் பரப்புரை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தினால், தமிழ் ஒருநாள் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்.

படித்தவன் சூதும் வாதும் செய்தால்,

போவான் போவான்,  ஐயோ என்று போவான்சுப்பிரமணிய பாரதிஎன்று வளர்மெய்யறிவான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry