தமிழில் வருகிறது ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’! ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் எனத் தகவல்!

0
85

விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தப்பிச் செல்லும் கதையும் அவர்களின் வலியும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

காஷ்மீரில் 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் அங்கிருந்து இருந்து வெளியேறிய சம்பவங்களை மையமாக வைத்து இந்தியில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பிரதமர் மோடி பாராட்டியதை அடுத்து, இந்தப் படம் அதிகம் கவனிக்கப்பட்டது. படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

இந்தப் படத்திற்கு மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, திரிபுரா உட்பட சில மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன. இதற்கிடையே, இந்தி தவிர மற்ற மொழிகளிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன. தமிழிலும் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் ஏப்ரல் முதல் வாரம் தமிழில், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &