புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட வீராம்பட்டினத்தில், கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நூற்றான்டு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கருணாநிதி சிலையை திறந்து வைத்துப் பேசினார். அப்போது காந்தி குறித்தும், இந்து மதம் பற்றியும் அவர் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஆ. ராசா, காந்தி இவ்வளவு பெரிய தலைவராக வந்ததற்கு அவரோ, அவரது சித்தாந்தமோ மட்டும் காரணமல்ல. காந்திக்குப் பின்னால் செலவு செய்வதற்கு பிர்லாக்கள் இருந்தார்கள், டாடாக்கள் இருந்தார்கள். பிர்லா மாளிகையில்தான் காந்தி தங்கியிருந்தார். நான் குறை சொல்லவில்லை, கட்டியிருந்தது கோவணமாக இருந்தாலும், ஆனால் தங்கியது பிர்லா மாளிகை. சுதந்திரப் போராட்டத்துக்கு எல்லாம் தந்தது பிர்லாக்கள், டாடாக்கள். பண பலமும், சாதி பலமும் இந்தியாவில் ஒரு அரசியல் தலைவருக்கு தேவையாக இருக்கிறது. அப்படி இருந்தால்தான் ஒரு இடத்தை எட்ட முடியும் என்ற யதார்த்தம் இன்றைக்கும் இல்லை என்று சொல்ல முடியாது.
காந்தி பெரிய தலைவராக வந்ததற்கு பணம்தான் காரணம். அவர் கட்டியிருந்தது கோவணம், தங்கியிருந்தது பிர்லா மாளிகை! ஆ. ராசா சர்ச்சை பேச்சு! @EPSTamilNadu @INCIndia @mkstalin @annamalai_k @drramadoss pic.twitter.com/tGFIUahTLS
— VELS MEDIA (@VelsMedia) September 6, 2023
இந்து மதத்தால் எல்லா சாதியினருக்கும் இழிவு இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து தாண்டி வந்துள்ளோம். நான் புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுகிறேன். அமித் ஷா அல்லது பாஜகவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள், டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். ஒரு லட்சம் பேர் கூடட்டும். நீங்கள் சனாதனத்தைப் பற்றி பேசுங்கள். திமுக சார்பில் நானும் பேசுகிறேன். நீங்கள் சரியா, நான் சரியா என்று இந்த தேசத்தில் இருக்கின்ற மக்கள் தீர்மானிக்கட்டும்.
நாங்கள் சனாதனம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழிசை ஆளுநர், வானதி சீனிவாசன் வழக்கறிஞர், அண்ணாமலை ஐபிஎஸ். நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வந்து உட்கார்ந்து கொண்டு சனாதனம் பேசுகின்றவர்களுக்கு மனசாட்சி இல்லையா? நான் திறந்த வெளியில் இருந்து சொல்கிறேன். முடிந்தால் வழக்கு போடுங்கள்.
Also Read : பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!
மோடியைவிட, அமித் ஷாவைவிட, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட, ஆர்எஸ்எஸ்-ல் இருப்பவர்களைவிட வெள்ளையர்கள் நாணயமானவர்கள். மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும். அப்படி மனிதனை மனிதனாக நேசிக்காத ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மனிதனுக்கு தவறு இழைத்துவிட்டு மன்னிப்புக்கேட்ட வெள்ளைக்கார்கள், போப் ஆண்டவர் முன்னாள் நீங்கள் தூசுக்குச் சமம்.” இவ்வாறு ஆ. ராசா பேசினார்.
ஆ. ராசா பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். நாங்கள் கடுமையாக படித்ததால் தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது எனக் கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் பதவியை தர ஏன் மறுக்கிறீர்கள்? உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள்.
உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதலமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா?” இவ்வாறு ஆளுநர் தமிழிசை வினவியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry