பள்ளிகளில் வேலைவாய்ப்பக பதிவு முறை ரத்து! ஆன்லைனில் செய்துகொள்ளுமாறு தமிழக அரசு அறிவிப்பு!

0
218

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக தங்களது கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடை முறை இருந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே இணையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தார்கள்.

FILE IMAGE

இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனையை அடுத்து இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ள மாணவர்கள் https:tnvelaivaipu.gov.in என்ற இணையதளம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பதிவுகள் புதுப்பித்தல், கூடுதல் பதிவு ஆகியவற்றையும் இணையதளத்தில் வாயிலாகவே பதிவு செய்து கொள்ளலாம். இ-சேவை மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இந்த சேவைகள் தொடரும். விருப்பமுள்ள மாணவர்கள் அங்குச் சென்று தங்கள் பதிவை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry