குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது 15 வருட காதலரான ஆன்டனியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் பிராமண வைணவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை மேனகா – தயாரிப்பாளர் சுரேஷின் மகள் என்கிற அடையாளத்துடன் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், இவர் தனக்கான இடத்தை திரையுலகில் தக்க வைத்து கொள்ள மிக முக்கிய காரணம் இவரின் திறமையான நடிப்பும் கொஞ்சம் அதிஷ்டமும் தான்.
கீர்த்தி சுரேஷுக்கும், கேராளவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அதை உறுதி செய்து பேட்டியளித்திருந்தார் கீர்த்தி. அதன் பிறகு நவம்பர் 27-ம் தேதி தனது காதலனை அறிமுகப்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்காக கோவா செல்வதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்டோரி போட்டிருந்தார். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்கு தயாராகுவதாக `Kitty’ என பெயர் கொண்ட உடையை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கீர்த்தி – ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் நடந்திருந்தாலும்… பிராமண முறைப்படி கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற பட்டு சேலையில் ஆண்டாள் வேடத்தில் இருக்க, அவருக்கு மாப்பிள்ளை ஆண்டனி தட்டில் நெற்றியில் திருநாமம் போட்டு, பட்டு வேஷ்டியில் தாலி கட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் காதலர் ஆண்டனி தட்டில் ஒரு கிறிஸ்தவர் என்பதால், இவர்களின் திருமணம் கிருத்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி ஆண்டாளாக மாறி, ஆண்டனிக்கு கழுத்தை நீட்டியுள்ள வெட்டிங் போட்டோஸ் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
முதல் படத்திலேயே நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ், இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் என தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து இளம் ஹீரோயின்களை பொறாமை பட வைத்தார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் மட்டும் பைரவா, சர்க்கார் என இரண்டு படங்களில் நடித்தார்.
மேலும் இவருடைய மார்க்கெட் அடிக்கடி கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், அதனை நிலையாக நிற்க வைத்தது, சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம். இந்த படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது மட்டும் இன்றி, இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இந்த படத்திற்கு பின்னர் ஹீரோயின் சப்ஜெட் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கிய கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட 2 படங்கள் இவரின் கைவசம் உள்ளது. இதுமட்டுமல்ல இம்மாதம் கீர்த்தி சுரேஷூக்கு கூடுதல் ஸ்பெஷல் ஒன்றும் இருக்கிறது. கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்து பக்கமும் பரிச்சயமான கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் தடம் பதிக்கவிருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry