‘ரீபோக்’ நிறுவனத்தை விற்க முடிவு! சொந்த பிராண்டில் கவனம் செலுத்த அடிடாஸ் திட்டம்!

0
28

15 ஆண்டுகளுக்கு முன்பு 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ‘ரீபோக்’ பிராண்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு ஆடை, காலணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் ‘ரீபோக்’ நிறுவனத்தின் வர்த்தகத்தையும் வைத்துள்ளது. இந்நிலையில் 2006-ம் ஆண்டு, சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ரீபோக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைக்கி நிறுவனத்துடன் போட்டிபோட்டி வாங்கிய நிலையில், ரீபோக் விற்பனை சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவில் இல்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருந்து ‘ரீபோக்’ நிறுவனத்தின் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணத்தை அடிடாஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. சொந்த பிராண்டில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக அடிடாஸ் கூறியுள்ளது. ரீபொக்கும், அடிடாஸும் தனித்தனி நிறுவனங்களாக செயல்படுவது, அவைகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று அடிடாஸ் சிஇஓ கஸ்பர் ரோஸ்டட் தெரிவித்திருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry