அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறது.
ஆனால், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும்போது, திமுக, அமமுக ஆதரவுடன் ஓபிஎஸ்-ஆல் என்ன செய்ய முடியும் என அதிமுக நிர்வாகிள் கேள்வி எழுப்புகின்றனர். உயர் நீதிமன்றம் சொன்னபடி ஆணையரின் முன்னிலையில் பொதுக்குழு கூட்ட தயாராக இருக்கிறோம், ஓபிஎஸ் தயாரா? என அதிமுகவினர் கேட்கின்றனர்.
Also Read : முழுபோதையில் பேருந்தில் தகராறு செய்த 11ம் வகுப்பு மாணவன்! மதுவிலக்குத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் அவலம்!
இந்நிலையில், அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ்., மீண்டும் கட்சிக்கு வருவதற்கு கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விடமாட்டோம். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு, உண்மையான அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை முரண்பட்ட தீர்ப்பு என்று கரூர் மாவட்ட அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி கே.என்.ஆர். சிவராஜ் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் மீண்டும் ஓபிஎஸ்-ஐ விடமாட்டோம். எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கியவர் ஒ.பி.எஸ். சூளுரைக்கும் அதிமுக-வினர். @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKOfficial @AIADMKITWINGOFL pic.twitter.com/HMfFhgr013
— VELS MEDIA (@VelsMedia) August 17, 2022
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry

