முழுபோதையில் பேருந்தில் தகராறு செய்த 11ம் வகுப்பு மாணவன்! மதுவிலக்குத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் அவலம்!

0
166

கரூர் மாவட்டம் குளித்தலை, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவன், நேற்று பள்ளிக்கு வராமல் சீருடையில் மது மற்றும் கஞ்சா பயன்படுத்தி உள்ளான். வழக்கம் போல பள்ளிக்கூடம் முடியும் நேரத்தில் போதையிலேயே பேருந்தில் ஏறி உள்ளான்.

ஏறும் போதே ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளான். அந்த பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் பலரும் கூச்சல் எழுப்பவே, பேருந்தை குளித்தலை காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர், போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார்.

Also Read : போதைப்பொருளால் சீரழியும் மாணவர்கள்! கஞ்சா வேட்டையைத் தடுக்கும் அதிகார வர்க்கம்!ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

காவலர்கள் பேருந்தை சோதனை இட்டு மாணவர்களை எச்சரிக்கை செய்தனர். அப்போது பேருந்தின் உள்ளே போதையில் இருந்த அந்த மாணவன் பெண் காவலரை கெட்ட வார்த்தையால் திட்டி உள்ளான். நிலைமையை உணர்ந்த காவலர், முழு போதையில் இருந்த மாணவனை பேருந்தில் இருந்து இறக்கி தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். பிறகு அவனது வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டபோது, “இது போன்ற நிகழ்வு தினமும் நடைக்கிறது, எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மீறி பேசினால் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களை தகாத வார்த்தையல் திட்டி மிரட்டுகின்றனர். இது போன்று தினமும் நடப்பதால் பொறுத்து கொள்ள முடியாமல்தான் இன்று நாங்களே காவல் நிலையம் முன்பு பேருந்தை நிறுத்தி புகார் அளித்தோம்.” என்று தெரிவித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது, சம்பந்தப்பட்ட மாணவன் பள்ளிக்கு வருவதே இல்லை, இந்தச் சம்பவம் பள்ளியில் நடக்கவில்லை என்று கூறினார். இதுபற்றி வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், கஞ்சா ஆபரேன் 2.0 என டிஜிபி அறிவித்தார். பின்னர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, போதைப் பொருளை தடுக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாகும் நிகழ்வை தடுக்க முடியவில்லை. மறைந்த முதலமைச்சர் கருணாநிதி முதன் முதலில் வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் போதைப் பழக்கத்தால் மாணவர்கள் வேதனையாக இருக்கிறது.” என்று கூறினர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry