பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுமாறு சுற்றறிக்கை! ஐபெட்டோ கடும் கண்டனம்!

0
175

விநாயகர் சதுர்த்தி விழாவை பள்ளிகளில் கொண்டாடுமாறு சுற்றறிக்கை அனுப்புவதா? என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.சு. சுகானந்தம், பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரா?, மத்திய அரசின் முகவராக இருந்து துறையை நடத்துகிறாரா? அல்லது ஆன்மிக துறையின் பொறுப்பை இவரே ஏற்றுக் கொண்டாரா?

AIFETO Annamalai

செப்டம்பர் 5ந் தேதி சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் மக்களிடம் நன்கொடை பெற்று தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வரை PM POSHAN திட்டத்தின் கீழ் “நல் விருந்து” அளிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். நேர்மையின் திருவுருவம் எவ்வித விளம்பரங்களையும் விரும்பாத டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயருக்கே களங்கம் கற்பிக்கின்ற செயல்பாடாக இதனை சித்தரித்து வருகிறார்.

Also Read : வாழைக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? ஆச்சரியப்படவைக்கும் நன்மைகள்! Health Benefits of Vazhaikkai: A Nutritional Powerhouse!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம், ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும் புகார் தெரிவித்திருந்தோம். PM POSHAN திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அடுத்ததாக செப்டம்பர் ஏழாம் தேதி பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.சு. சுகானந்தம் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். இவர் என்ன ஆன்மீகத்துறையின் பொறுப்பை ஏற்று நடத்துகிறாரா? கலைமகள் விழாவையே கொண்டாடச் சொல்லி அரசு ஆணை வழங்கவில்லை. அடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புவார்.

Also Read : குறட்டை எப்போது டேஞ்சரானதாக மாறுகிறது? குறட்டையை நிறுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்! How to Stop Snoring Naturally?

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் செயல்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் ம.சு. சுகானந்தம் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பில் இருந்து விடுவித்து, அதிகாரமற்ற பொறுப்பில் நியமனம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் சொந்த ஊர் பெரம்பலூர் ஆகும். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொகுதியாகும். அரசியல் கட்சிகளின் போராட்டம் வெடிக்கும் முன் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry