
இந்தியா ஆண்டுதோறும் 2.4 மில்லியன் மெட்ரிக் டன் ஆப்பிள்களை உற்பத்தி செய்கிறது. ஆப்பிள்களில் ரெட் டெலிசியஸ், டேன்ஜி கிரீன் மற்றும் பல வகைகள் உள்ளன. “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. ஆப்பிளின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்குச் சான்று. அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்டவை இந்தப் பழத்தில் நிறைந்துள்ளன.
Also Read : இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழங்கள்! சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
ஊட்டச்சத்து சுரங்கம்:
ஆப்பிள்கள் ஒரு ஊட்டச்சத்து மிக்க பவர்ஹவுஸாக உள்ளன. இதில் வைட்டமின் சி உள்படபல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. ஆப்பிள்கள், இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியக் கனிமமான பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக உள்ளன.
ஆப்பிள்களில் காணப்படும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவுகிறது. திருப்தி உணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் எடையை பராமரிக்க பங்களிக்கிறது. ஆப்பிளில் உள்ள குர்செடின், குடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் வளர்வதைத் தடுக்கிறது. அதே நேரத்தில் அதிலுள்ள பெக்டின் என்பது குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும்.

ஆப்பிள்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், குர்செடின் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் போன்றவை, இதய நோய், மற்றும் சில வகை கேன்சர் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய முழுமை உணர்வை ஊக்குவிப்பதன் மூலமும், ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எடை மேலாண்மைக்கு பங்களிக்கிறது. ஆப்பிள்கள் 85% தண்ணீரால் ஆனது. ஒரு பழத்தை முழுவதுமாக உட்கொள்ளும்போது இது ஒரு நீரேற்றம் தரும் சிற்றுண்டியாக அமைகிறது.
ஆப்பிள்கள் நார்ச்சத்து நிறைந்ததாகவும், சர்க்கரை குறைவாகவும் உள்ளது. இது குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசிமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது. 38,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் காரணமாக, தினமும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த ஹார்மோன் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
அதிக கொழுப்பு என்பது இதய நோய்க்கான அதிக ஆபத்தைக் குறிக்கிறது. அதிக கொழுப்பு தமனிகளை அடைத்து, இறுதியில் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. ‘பெக்டின்’ என்பது ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்து ஆகும். இது செரிமானப் பாதைகளில் கொழுப்பை பிணைத்து அதை வெளியேற்ற உதவுகிறது.
ஆப்பிள்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்களை சேதப்படுத்தி பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு அதைத் தடுக்க உதவும். ஆப்பிள்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உயர் இரத்த அழுத்தத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆப்பிள் தோல்களில் உள்ளன. அவை சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கின்றன, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஒவ்வாமை ஆஸ்துமா தொடர்பான காற்றுப்பாதை வீக்கத்தைக் குறைக்கும். ஆப்பிள் தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும். ஆப்பிளில் உள்ள குர்செடின், ஆஸ்துமா மற்றும் சைனசிடிஸ் போன்ற ஒவ்வாமை அழற்சி நோய்களுக்கு ஏற்றது.
இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஆப்பிள்கள் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 14% – 22% குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு ஆப்பிளாவது சாப்பிடுபவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவு என்று மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
Also Read : கொய்யா பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கத்தகு நன்மைகள்! கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு.
டயட்டில் ஆப்பிள்களை எவ்வாறு சேர்ப்பது?
ஆப்பிள் பழத்தின் பலன்களை முழுமையாக பெற தினசரி உணவு வழக்கத்தில் இதனை சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு ஃபிரெஷ்ஷான ஆப்பிளை ஸ்னாக்ஸாக அப்படியே சாப்பிடலாம். இல்லை என்றால் சாலட்கள் அல்லது ஓட்மீலில் ஆப்பிள் பீஸ்களை சேர்க்கலாம் அல்லது சுவையான டெசெர்ட் வகைகளில் ஆப்பிளை சேர்த்து பேக்கிங் செய்யலாம். வழக்கமான அடிப்படையில் ஆப்பிள்களை உங்கள் டயட்டில் தவறாமல் சேர்ப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தலாம்.

ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
உணர்திறன் உள்ள நபர்களுக்கு, ஆப்பிளின் அதிக நார்ச்சத்து காரணமாக வீக்கம், வாயு அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, சிலருக்கு ஆப்பிள் ஒவ்வாமை ஏற்படலாம், இதன் விளைவாக அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும், ஆப்பிளில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன, எனவே சரியான வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கப்படாவிட்டால் பல் சிதைவு போன்ற பல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும்.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) அல்லது பிரக்டோஸ் மாலாப்சார்ப்ஷன் போன்ற சில மருத்துவ நிலைமைகளைக் கொண்ட நபர்கள் ஆப்பிள்களை சாப்பிட்ட பிறகு அசௌகரியத்தை அனுபவிக்கலாம். உங்கள் உணவில் ஆப்பிள்களைச் சேர்க்கும்போது தனிப்பட்ட சுகாதார காரணிகளை கருத்தில் கொள்வது அவசியம்.
Also Read : உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?
Summary : ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
ஆப்பிள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் பருமன், வகை 2 நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். சிறிய தொற்றுநோய்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன மற்றும் தோல் வறட்சியைத் தடுக்கின்றன. முகப்பரு மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் ஆப்பிள்களைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து வருவதால், ஆப்பிள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆப்பிள் விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry