2025க்கான மேஷ ராசி பலன் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…! துரத்தும் சனி பகவான்! உஷார்..!

0
81
In terms of health, Aries individuals need to pay attention to their physical well-being, especially their digestive system. Regular exercise and a balanced diet are key. Stress management will be important, particularly during mid-year.

(அஸ்வினி, பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1-ம் பாதம்)

முன் கோபமும், அவசர புத்தியும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, 2024-ம் ஆண்டில் நீங்கள் சகல விதத்திலும் யோகங்கள், வசதிகள், வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைந்து இருப்பீர்கள். நல்ல வருமானம், குடும்பத்தில் குதூகலம், தொழில், வியாபாரத்தில் லாபம் என்று 2024-ம் ஆண்டு தூள் கிளப்பி இருக்கும்.

2024-ஐ போலவே 2025-ம் ஆண்டும் அமைந்து விடும் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். ஏனென்றால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருந்த சனிபகவான் மார்ச் மாதத்திற்கு பிறகு 12-ம் இடமான விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். சிம்பிளாக சொல்லப்போனால் ஏழரை சனியின் பிடியில் சிக்கப்போகிறீர்கள்.

Also Read : 2025-ல் யாருக்கு ஏற்றம்..? யாருக்கு ஏமாற்றம்..? ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்!

ஆமாம், 2025 மார்ச் மாதம் 29-ம் தேதிக்கு பிறகு ஏழரை ஆண்டுகள் உஷார், கவனம், எச்சரிக்கை, நிதானம் இதுதான் உங்களது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ஏழரை சனியில், முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச்சனி என்பதால் செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும். இதுநாள்வரை பணப்புழக்கம் தாராளமாக இருந்ததால் பணத்தின் மதிப்பு தெரியாமல் தண்ணீராய் செலவு செய்த உங்களுக்கு ரூபாயின் மதிப்பு புரிய வரும்.

“பணப்பை இருக்கு ஆனா பணம் தான் இல்ல” என்று புலம்பப்போகிறீர்கள். செலவுகள் அதிகரிக்கும் போது தான் “கடந்த இரண்டரை ஆண்டுகளில் சம்பாதித்த பணத்தில் எவ்வளவோ செலவு செய்தோம், அதில் கொஞ்சமாவது சேமித்து வைத்து இருந்திருக்கலாமோ, கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டோம்” என்று எண்ண தோன்றும். அந்தளவுக்கு செலவுகள் வரிசைக் கட்டி வரப்போகின்றன.

Aries zodiac symbol | Aries 2025 Astrology Predictions.

சுய ஜாதகத்தில் மோசமான தசா புத்தி நடப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். வயிற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிகிச்சை செய்ய வேண்டி வரும். மருத்துவ செலவுக்காக கடன் வாங்க நேரிடும். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக வயிற்றில் பிரச்சினை இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சின்ன சின்ன வாக்குவாதங்கள் கூட பெரிய பிரச்சினையில் முடியும் என்பதால், முடிந்த அளவிற்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். முடிந்தால் வாரத்திற்கு ஒரு நாள் மெளன விரதம் இருந்து விடுங்கள்.

இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்வது நல்லது. வெளிநாட்டிற்கு செல்வதற்காக ஏஜெண்ட்களிடம் பணம் கொடுப்பதோ அல்லது அரசாங்க வேலைக்காக பெரிய மனிதர்களையோ, அரசியல்வாதிகளையோ நம்பி பணம் கொடுக்கவோ வேண்டாம். பணம் கொடுத்து அரசு வேலையை வாங்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நடப்பது தலைகீழாக இருக்கும். பணம் கொடுத்தால் வேலையும் கிடைக்காது, பணமும் திரும்ப வராது. சிலர் கடன் வாங்கி பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டு கடனுக்கு வட்டி கட்டும் நெருக்கடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களால் பிரச்சினைகள், செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்தில் புதிய வில்லங்கம் வந்து சேரும். தந்தை வழி சொத்துக்களை விற்கும் முயற்சிகள் தாமதமாகும்.

2025-ல் பிரச்சினைகள் மட்டும்தானா? நல்ல செய்தியே இல்லையா? என்று எண்ண வேண்டாம். மே மாதம் நடைபெறும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தம்பி, தங்கை, அண்ணன், அக்கா மூலம் லாபம் அடைவீர்கள். மனைவி உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் இல்லற வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில் ஓரளவுக்கு கைக் கொடுக்கும்.

திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் வயது மேஷ ராசிக்காரர்களுக்கு வரன் அமையும். திருமணம் தொடர்பான விஷயங்களை தாராளமாக மேற்கொள்ளலாம். இருப்பினும் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. சொந்த ஜாதகத்தில் நல்ல யோகமான தசா, புத்தி நடப்பவர்கள் விரயச்சனி பாதிப்புகளை சமாளித்து விடலாம். 6, 8-ம் அதிபதிகள் தசா, புத்தி நடப்பவர்கள் எச்சரிக்கையாக நடந்துக் கொள்வது நல்லது. இறை வழிபாட்டின் மூலமே பாதிப்புகளின் வீரியத்தை குறைக்க முடியும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையன்று திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடுவது சிறப்பு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை அம்மனை வழிபடுங்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வராகி அம்மனை வழிப்படுவது நல்லது.

(தொடரும்)

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Image Source : Getty Image

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry