தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு பலன்களா..! Benefits Of Applying Oil on Belly Button!

0
276
The belly button is not just a tiny dot on your navel but it is a chamber which holds the solution to many health problems. The belly button is connected to multiple veins in the body and when it is nourished using oil, it helps you get rid of certain health problems too.

அந்த காலம் முதலே தூங்குவதற்கு முன்பு வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால், நமது உடலுக்கும் பலவித நன்மைகளும் கிடைத்திருக்கின்றன. இதை நவீன மருத்துவமும் நிரூபித்துள்ளது. தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.

நம்முடைய உடலில் ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளியே, இந்த தொப்புளில்தான் அமைந்துள்ளது. குறைந்தபட்சம் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது.

Also Read : தக்காளி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? Tomatoes cause arthritis?

ஆனால், இந்த தொப்புளை, பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவே காலங்காலமாக பார்க்கப்பட்டு வருவது வேதனைக்குரியது. அதனால்தான், இத்தகைய தொப்புளின் மகிமையையும், பயன்களையும் பெரும்பாலான ஆண்கள், உணராமலேயே போய்விடுறார்கள். ஒரே ஒரு துளி எண்ணெய்யை தொப்புளில் வைத்தால் போதும், அதனால் கிடைக்கும் பலன்கள் ஆச்சரியப்படுத்தும்.

தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டுவிட்டால், கண் பார்வை தெளிவடையும். கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் வேலை பார்க்கும் பலருக்கும் கண் வறட்சி உண்டாகிறது. அவர்கள் இந்த முறையை பின்பற்றினால், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு நிவாரணம் கிடைப்பதுடன், கண்கள் குளிர்ச்சி அடையும்.

பாத வெடிப்புகளுக்கும், சரும பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமே உடல்சூடுதான். தொப்புளில் ஒருதுளி எண்ணையை வைத்தால், பாத வெடிப்பு குறையும். சருமம் பொலிவாகும். வறட்சி மறைகிறது. தலைமுடி ஆரோக்கியமாக வளரும். நம் தொப்புளில் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால், நாம் விடும் எண்ணெய் தொப்புளில் உள்ள நரம்புகள் வழியாக சென்று அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

முழங்கால் மூட்டு வலிகள் இருப்போரும், தொப்புளில் எண்ணெய் விடுவதால் தீர்வு கிடைக்கும். அதேபோல, கால் நரம்புகளில் வலி இருந்தாலும் அவை நீங்கும். மூட்டு, கால் வலிகள் குணமாகும். உடல் நடுக்கம், சோர்வு, கணைய பாதிப்புகளுக்கு அருமருந்தாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. இரவில் நல்ல தூக்கம் வரும்.

பெண்களின் தொப்புள் Uterusல் Umbilical cord மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது. நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யால் மசாஜ் செய்யும்போது Uterusல் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மாதவிடாயின்போது வரும் வயிற்றுவலியை குறைக்க உதவுகிறது. தொப்புள் கர்ப்பப்பையுடன் நரம்புகள் மூலமாக  இணைந்திருப்பதால், தொப்புளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தும்போது அது பெண்களுக்கு கருவுறுதலை அதிகரிக்கும்.

Female uterus, illustration.

தொப்புளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால், ரிலாக்சாக இருப்பது மட்டுமில்லாமல், பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ் குறைகிறது. ஏனெனில், தொப்புள் Vagus nerve என்னும் நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவே அமைதியாக, ரிலாக்சாக இருப்பதற்கான நரம்புகளை கட்டுப்படுத்துகிறது. Lavender oil and Chamomile oil ஆகிய எண்ணெய்களை தொப்புளில் தடவுவதன் மூலம் மன அமைதியை தந்து ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றத்தைப் போக்கும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி இருமல் போன்ற தொந்தரவு ஏற்படாமல் தடுக்க முடியும். கண்பார்வை திறன் அதிகரிப்பு, மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பிற்காலத்தில் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தை  தூய்மையாக்குகிறது, முகப்பொலிவை அதிகரிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

Also Read : வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் இத்தனை நோய்கள் குணமாகுமா? Amazing Health Benefits of Vendhaya Keerai!

எந்த எண்ணெய், என்ன பலன் தெரியுமா?

ஆயுர்வேத முறைப்படி Navel chakras or swadhisthanaல் அதிகப்படியான சக்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே உயிர்களின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் எந்த எண்ணெய் வைப்பதால், என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய்: தூங்குவதற்கு முன் இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் லேசாக மசாஜ் செய்தால் போதும். இதனால், கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

வேப்பெண்ணெய்: தொப்புளில் வேப்பெண்ணெயை வைத்தால், சரும வியாதிகள் நீங்கும். தொற்றுக்களும் அண்டாது. நச்சுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிமாகும். தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய்யை தடவி வந்தால், பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலி பறந்து விடும்.

நல்லெண்ணெய்: உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி மசாஜ் செய்வது போல லேசாக தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும்.

கடுகு எண்ணெய்: தொப்புளில் கடுகு எண்ணையை விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

விளக்கெண்ணெய் : 3 சொட்டு விளக்கெண்ணெய் வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்: இந்த 2 எண்ணையின் ஏதாவது ஒன்றை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும் என்கிறார்கள். அதிலும், கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லது. அதேபோல, பாதாம் எண்ணெய்யை தினமும் இரவில் தொப்புளில் வைத்து மசாஜ் செய்தால், 10 நாட்களில் முகம் மற்றும் சருமம் பளபளக்கும். முகம் இளமையாக மாறும், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

Also Read : முட்டைகோஸில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன? Cabbage Benefits: How This Superfood Boosts Your Health!

வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும்  என்பதில் சந்தெகமில்லை.

உடலில் எல்லா பாகங்களையும் குளிக்கும் போது சுத்தம் செய்வோம். ஆனால் தொப்புளை கண்டுகொள்ளவே மாட்டோம். இரவில் தொப்புளில் எண்ணெய் வைத்துக் கொண்டு தூங்கும்போது, தொப்புள் இயற்கையாக அதிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தமாக்கும். அதோடு தொப்புள் பகுதியில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கம்தான். ஆனால், இதனைச் செய்யும் போது, எண்ணெயின் அளவை கவனமாகக் கொண்டு செயல்படுவது முக்கியம்.

Image Source : Getty Image

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry