51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா! தனுஷின் ‘அசுரன்’ உள்பட 2 தமிழ்ப் படங்கள் தேர்வு!

0
52

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரனும், குறும்படங்கள் பட்டியலில் தேன் என்ற படமும் தேர்வாகி உள்ளன.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல்  நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

கொரோனா பரவல் காரணமாக திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்பட விழாவுக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், முழு நேர படப் பிரிவில் (Feature Film) பிரிவில், பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்தஅசுரன்திரைப்படம் தேர்வாகியுள்ளது. இதேபோல், திரைப்பட விழாவில் ஒளிபரப்ப 20 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழ் மொழியில் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் வெளியானதேன்திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இயற்கையே அரணாகத் திகழும் நீலகிரி மலைக் கிராமத்தில், கார்ப்பரேட் நிறுவனம் கால் பதித்தால், கலப்படம் மிகுந்தால் என்ன ஆகும் என்பதேதேன்படத்தின் கதையாகும். இந்தத் திரைப்பட விழா குறைந்த அளவு பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ள நிலையில், ஆன்லைன் மூலமாக பார்க்கும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry