வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா? உஷ்ணம், பித்தம், மலபந்தத்தை நீக்கும்!

0
419

வாழைமரம் உஷ்ணப் பிரதேசங்களில் நன்றாக வளருகிறது. மேலும் வாழைப்பழம் மற்றப் பழங்களை விடக் குறைவான விலையில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. உலகின் பல பாகங்களில் இது முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் “Apple of paradise” என ஐரோப்பியப் புராணக் கதைகள் கூறுகின்றன.

ஆப்பிள் பழத்தில் காணப்படுவது போன்று வாழைப் பழத்திலும் வைட்டமின்சிஅதிகமாகக் காணப்படுகிறது. இதில் இரும்பு, எரியம் முதலிய சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் காரச் சத்து அதிகமாக இருப்பதால் உண்பவர்களின் உடலிலுள்ள காரச்சத்தைப் பத்திரப்படுத்தப் பயன்படுகிறது. ஏனைய பழங்களை விட இதனுடைய உணவு தரும் சூட்டின் அளவு (Calorific value) அதிகம். எனவே, தானியத்திற்குப் பதிலாக இதை உணவாகக் கொள்ளலாம். இதிலுள்ள சர்க்கரைச்சத்து குடற்கிருமிகளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. ஆகவே இதை கிருமி நாசினியாகப் பயன்படுத்தி குடல் நோய்களை அகற்றலாம்.

கனிந்த பழத்துடன் சிறிது புளியையும் உப்பையும் கலந்து பிசைந்து உட்கொண்டால் வயிற்றுழச்சல் (சீதபேதி) தீரும் என்று டாக்டர் கீர்த்திகா கூறியுள்ளார். சிறு குழந்தைகளுக்கு வயிற்றுழச்சல் ஏற்பட்டால் பழத்தை நன்றாகப் பிசைந்து கூழாக்கிக் கொடுத்தால் நோய் தீரும். மேலும் குன்மநோய் (Gastric ulcer), குண்டிக்காய் வீக்கம் (Nephrities), கீல்வாதம் (Gout), டைபாயிடு காய்ச்சல் முதலிய நோய்க் காலங்களில் வாழைப்பழத்தை அதிகமாகப் பயன்படுத்தி குணமடையலாம். குடற்புண் (Dyspepsia) நோயாளிகளுக்கு இது நல்ல உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு இப்பழம் ஒரு நல்ல மருந்தாகும். இளகிய மலம் உள்ளவர்கட்கும் இது நல்ல உணவாகும்.

வாழைப்பழத்தில் புரதச்சத்து (Protein) அதிகமாக இல்லாததால் பாலுடன் கலந்து உண்பதால் அது முழு உணவாகிறது. காலையில் பாலும் பழமும் சாப்பிடுவது நல்ல பழக்கம். பாலையும் வாழைப்பழத்தையும் கலந்து உண்டு ஒருவர் பலகாலம் ஜீவிக்கலாம். உண்பதற்கு பழம் நன்கு கனிந்திருக்க வேண்டும். நீலக்கருப்பு புள்ளிகளை உடையதாக இருத்தல் நலம். பழத்தின் தோல் மஞ்சள் நிறமாக இருந்தால் மாத்திரம் போதாது. நன்கு கனியாத பழங்கள் ஜீரண உறுப்புகட்கு கடினமாக இருப்பதோடு அதிலுள்ள சர்க்கரைச் சத்தும் ஜீரணமடையப் பக்குவப்படாத நிலையில் இருக்கும்.

எனவே, நன்கு கனியாத பழங்களை உண்ணக்கூடாது. பழத்தின் தோலில் சில இரசாயனப் பொருள்கள் உள்ளன. தோலின் வெடிப்பு ஏற்படாத வரை உள்ளிருக்கும் சதையை நன்கு பாதுகாக்கும் தன்மை மேற்சொன்ன இரசாயனப் பொருள்களுக்கு உண்டு; அதனால் கிருமிகள் அண்டாது.

பழத்தின் தோலை நீக்கி வெயிலில் உலர வைத்து, தூள் செய்து பல காலம் பத்திரப்படுத்தலாம். அப்பழத்தூளை பாலில் கலந்து உண்பதால் அது முழு உணவாகிறது. சுவையாகவும் இருக்கும். மேற்படி பழத் தூளிலிருந்து ரொட்டி செய்து குடற்புண் நோய் உள்ளவர்கட்கு மருந்தாகவும், உணவாகவும் கொடுக்கலாம்.

வாழையில் பல வகைகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் பொது இயல்போடு தனியியல்பும் கொண்டவை. பொதுவாக வாழைப்பழத்தை அதிகமாக உண்பதால் உடம்பை வெளுக்கச் செய்யும். சர்மரோகம், பித்தபிணிகள், மலச்சிக்கல் முதலியன தீரும். இரசதாளிப் பழம் நாவிற்கு இதமாக இருக்கும். கருவாழைப்பழம் பித்தத்தைப் போக்கும். மொந்தன் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பித்தம், வறட்சி முதலிய நோய்கள் நீங்கும்.

வெள்ளை வாழைப்பழம் சுவையுள்ளதாக இருக்கும். கதலிவாழைப்பழம் இனிப்புடன் சற்று புளிப்பு ருசியுடையதாக இருப்பதால் நாவிற்கு தனிச்சுவை அளிக்கிறது. இதனைக் கதலி பாகம் என்பர். அடுக்கு வாழைப்பழம் தேகக்காந்தியை உண்டாக்கும். பச்சை வாழைப்பழம் தேகத்தின் உஷ்ணத்தையும், பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும். மலை வாழைப்பழம் சோகை ரோகம், மலபந்தம் முதலியவற்றை குணப்படுத்தும் இயல்புடையது. பேயன் வாழைப்பழத்தை உட்கொள்ளுவதால் உட்சூடு நீங்கும். உடலில் குளிர்ச்சி உண்டாகும்; மேலும் மலமிளக்கமும் ஏற்படும்.

வாழைப்பழத்தில்நியாசின்என்ற சத்துப் பொருள் கொஞ்சம் உண்டு. ‘தியாமின்’, ‘ரிபோஃப்ளேவின்என்ற சத்துப்பொருள்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இதனுடைய உணவு தரும் சூட்டின் அளவு 153 ஆகும்.  வாழைப்பூ, காய், தண்டு முதலியன சமையலுக்கு பயன்படுகின்றன. அவை மருந்தாகவும் உபயோகப் படுத்தப்படுகின்றன. பெரும்பாடு நோய்க்கு மேற்படி பூவை தயிரில் கலந்து கொடுப்பதால் நோய் தீரும்.

நன்றிவீ.சேரந்தையாபிள்ளை, பி..பி.டி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry