
பேரீச்சம்பழத்தை நெய்யில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
பேரீச்சை பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளன. நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்து ஆகியவற்றை கொண்டுள்ள பேரீச்சை பழங்கள் நமக்கு துரிதமான ஆற்றலை தருகிறது மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு பல வகைகளில் பலன் அளிப்பதாக உள்ளது. பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே உள்ளது. பேரீச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், கொலஸ்ட்ராலை கரைப்பதற்கும் இது உறுதுணையாக அமைகிறது. பேரீச்சையை பலர் ஸ்நாக்ஸ் போல சாப்பிடுகின்றனர். சிலர் காலை உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர். பிரியாணி உணவுடன் பேரீச்சையை சைட் டிஷ் ஆக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் பலரிடம் உள்ளது.
பேரீச்சை – நெய் : ஆயுர்வேதத்தில் பேரீச்சை பழங்கள் அதன் குளிர்ச்சி தன்மையை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை நெய்யில் சேர்த்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் ஊக்குவிக்கிறது. கபம் வாதம் போன்றவற்றை நெய் குறைக்கும் என்று அறியப்படுகிறது. நெய் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் என்றும், எலும்புகள் வலுவடையும் என்றும் ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.
Also Read : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! அன்றாட ஆரோக்கியத்துக்கான சூப்பர் ஃபுட்!
நெய்யில் பேரீச்சை பழத்தை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், நம் உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடையும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல், நம் எண்ண ஓட்டம் மேம்படையும் என்றும், ஆழ்ந்த உறக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகையை குறைக்கிறது. பேரீச்சம்பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. பேரிச்சம்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மேஜிக் மிக்ஸ் : பேரீச்சை பழத்தில் ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகிய இயற்கையான இனிப்பு சத்து உள்ளது. இதனுடன் நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சேரும்போது, நம் உடலுக்கு நிலையான நீடித்த ஆற்றல் கிடைக்கும். பேரீச்சை பழத்தில் இயற்கையான இனிப்பு சத்துக்கள் உள்ளது என்றாலும், இதில் உள்ள நார்ச்சத்து நம் குடலில் இருந்து சர்க்கரையை உடல் துரிதமாக உறிஞ்சிக் கொள்வதை தடுக்கிறது.
செரிமான ஆற்றல் : குடலில் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை உற்பத்தி செய்யும் திறன் நெய்க்கு உள்ளது. ஆகவே நெய் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் எளிமையாக நடைபெறும் மற்றும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். நெய் மற்றும் பேரீச்சை சேர்த்து சாப்பிடுவதால் நம் மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகன்ட் கிடைக்கும். பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிறகான காலத்திலும் இந்த பழங்களை நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மேஜிக் மிக்ஸ் தயார் செய்வது எப்படி? : 10 முதல் 15 பேரீச்சை பழங்களை சுத்தமான கண்ணாடி ஜாடியில் போட்டுக் கொள்ளவும். கடாயில் ஒரு கப் நெய் ஊற்றி சூடு ஏற்றவும். நெய் கரைந்த உடன் அதில் தலா அரை டீஸ்பூன் அளவுக்கு இலவங்கப்பட்டை பொடி, ஏலக்காய் பொடி, அஸ்வகந்தா பொடி, சுக்கு பொடி ஆகியவற்றை சேர்க்கவும். சூடான கலவையை நன்றாக கிளறிவிட்டு பின்னர் இறக்கி ஆற விடவும். அதை பேரீச்சை பழங்களை போட்டுள்ள ஜாடியில் ஊற்றி கலக்கி வைத்துக் கொள்ளவும்.
Also Read : மிரட்டத் தயாராகும் மழைக்கால நோய்கள்! தடுக்கும் வழிகள் குறித்த பயனுள்ள டிப்ஸ்!
மற்றொரு விதமாக, சில பேரீச்சம்பழங்களை இரவு முழுவதும் நெய்யில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் அதிக பலன் கிடைக்கும். ஒரு நாளைக்கு 2-3 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் போதும். நெய்யில் ஊறவைத்த பேரிச்சம்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அதிக பலன் தரும். ஆனால் நெய் ஒவ்வாமை உள்ளவர்கள் அதை எடுத்துக்கொள்ளக் கூடாது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நெய்-பேரீச்சை பழத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதிக எடை கொண்டவர்கள் குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். சுய மருந்து வேண்டாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry