நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! இந்த பழங்களை எல்லாம் தினமும் சாப்பிடலாம்! உயர் ரத்த அழுத்தத்தையும் சமன்படுத்தும்!

0
238

ஆய்வின் அடிப்படையில்  நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இயலும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களை தொடர்ந்து உண்பதால்  உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காது எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெரும்பாலானோர் மத்தியில் பழங்களை சாப்பிடுவதினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்கிற கருத்து உள்ளது. ஆனால் மருத்துவர்கள் கூறுகையில் சர்க்கரை நோயாளிகள் பழங்களை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியமானது இல்லை என்கிறார்கள். அத்துடன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் என சில பழங்களின் தொகுப்பை அவர்கள் அளித்துள்ளனர்.

பொதுவாக பழங்களைச் சாப்பிடுவதால், சர்க்கரை அளவைக் குறைப்பது முதல் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவது வரை பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பழங்களில் வைட்டமின்கள் A, B, C, E, மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளதாக உள்ளன.

 • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது நீரிழிவு நோயாளிகளுக்கும் சேர்த்துதான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
 • பேரிக்காயை தாராளமாக சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
 • பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
 • அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
 • தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
 • மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
 • கசப்பு தன்மைக் கொண்ட நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
 • முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
 • நட்சத்திரப் பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
 • கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
 • நீரிழிவு நோய்க்கு உகந்த உணவில் பெர்ரிகளைச் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றிலிருந்து எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
 • ஆரஞ்சு இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தை குறைக்க உதவுகிறது, மேலும் இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
 • கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
 • ஒரு மீடியம் அளவு வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரையும் 6 கிராம் ஸ்டார்ச்சும் உள்ளது. இருப்பினும் வாழைப்பழத்தில் அதிக அளவு ஃபைபர் மற்றும் கம்மியான கிளைசிமிக் அளவு இருப்பதால் தாராளமாக வாழைப்பழம் சாப்பிடலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry