இரத்த ஓட்டம் என்பது உடல் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்வது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது, கழிவுப்பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. இரத்த ஓட்டத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே அதனை மேம்படுத்தும் 6 பானங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
இரத்த ஓட்டம் அல்லது இரத்த சுழற்சி மண்டலத்தில் இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் இரத்தம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரத்த சுழற்சி மண்டலத்தின் மையமாக இருக்கும் இதயம், இரண்டு முக்கிய சர்க்யூட்கள் மூலம் இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் கடத்துகிறது. அதாவது சிஸ்டமிக் சர்க்யூட் (உடல் முழுவதும்) மற்றும் நுரையீரல் சர்க்யூட் (நுரையீரலுக்கும் பிறகு அங்கிருந்தும் கொண்டு வருகிறது).
மூன்று வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. தமனிகள் என்கிற ஆர்டரீஸ், ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திலிருந்து எடுத்துச் செல்கின்றன, வெயின்ஸ் எனப்படும் சிரைகள் ஆக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை இதயத்திற்குத் திருப்பி கொண்டு வருகின்றன. கேப்பிலரிஸ் என்பது ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவுகளின் பரிமாற்றம் நிகழும் சிறிய இரத்த நாளங்களாகும்.
இரத்தம் என்பது இரத்த சிவப்பணுக்கள் (ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன), இரத்த வெள்ளை அணுக்கள் (தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகின்றன), பிளேட்லெட்டுகள் (இரத்த உறைவுக்கு உதவுகின்றன) மற்றும் பிளாஸ்மா (ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் கழிவுகளை சுமக்கும் திரவ கூறு) ஆகியவற்றை உள்ளாக்கியுள்ளது. ஹோமியோஸ்டேசிஸ் (Homeostasis) என்பது உடலின் உறுப்பு மண்டலங்களை சீராக இருக்கும் ஒரு நிலையாகும். இந்நிலையை பராமரிக்கவும், உயிர் வாழ்வதை ஆதரிக்கவும் இரத்த ஓட்டம் என்பது மிகவும் அவசியம்.
இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
நடுத்தர வயதுடைய நபரின் உடலில் சுமார் 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்த அளவு இதயத்தால் உடல் முழுவதும் தொடர்ந்து சுழற்சி முறையில் அனுப்பி, திரும்ப பெறப்படுகிறது. இரத்த ஓட்டத்தின் போது இரத்தமானது நிமிடத்திற்கு சுமார் 4-5 லிட்டர் என்கிற வேகத்தில் பயணிக்கிறது. அதாவது இரத்தம் இதயத்திலிருந்து, முழு உடலிலும் பயணித்துவிட்டு மீண்டும் இதயத்திற்கு திரும்ப சுமார் ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்.
இந்த நிலையான ஓட்டம் காரணமாக ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் புதிதாக பெறுவதையும், கழிவுப்பொருட்கள் உடனுக்குடன் வெளியேற்றுவதையும் உறுதி செய்கிறது. இரத்த ஓட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டால், அது சில நிமிடங்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் முழுவதும் உள்ள செல்கள் விரைவாக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழந்து, உயிரணு இறப்பு மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். உயிரைத் தக்கவைக்க ஆரோக்கியமான இரத்த சுழற்சியை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இது தெளிவாக விளக்குகிறது.
இயற்கையாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் 6 பானங்கள் :
இந்த பானங்களை அருந்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை இயற்கையாகவே மேம்படுத்த முடியும்.
கிரீன் டீ : கேட்ச்சின்ஸ் (catechins) எனப்படும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ, இரத்த நாளங்களின் விரிவான நிலையில் இருப்பதை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த விரிவாக்கம் சிறந்த இரத்த சுழற்சியை ஆதரிப்பதோடு இருதய ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
பீட்ரூட் ஜூஸ் : நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள பீட்ரூட் சாறு இரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவுகிறது; இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இந்த விளைவு திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த இரத்த சுழற்சியை ஆதரிக்கிறது.
மாதுளை ஜூஸ் : மாதுளை சாற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பாலிஃபினால்கள் – இவை இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் இன்ஃப்ளமேஷனைக் குறைப்பதன் மூலம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது; மேலும், தமனிகளில் படிமங்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.
இஞ்சி கலந்த தேநீர் : இஞ்சியில் சக்திவாய்ந்த ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளதால், அவை இரத்த நாளங்களில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனைக் குறைப்பதன் மூலம் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. இருதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
மஞ்சள் தண்ணீர் : மஞ்சளில் குர்குமின் என்கிற வேதிப்பொருள் உள்ளதால் இதில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆரோக்கியமான இரத்த நாளங்களைப் பராமரிப்பதற்கும் முக்கியமான எண்டோதெலியல் (endothelial) செயல்பாட்டை குர்குமின் மேம்படுத்துகிறது.
சிட்ரஸ் ஜூஸ் : ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C மற்றும் ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவற்றை வலுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும் படிமங்கள் சேராமல் தடுப்பதால் இரத்த ஓட்டம் நன்கு நடக்க வழிவகுக்கின்றன.
தண்ணீர் : தண்ணீரை ஒரு பானமா என்று நினைக்கலாம். ஆனால் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க போதிய நீர்ச்சத்து அவசியமாகும். ஏனெனில் உடலில் போதுமான நீர் இருந்தால் மட்டுமே இரத்தம் கெட்டியாகாமல் சீரான நிலையில் இருக்கும். நீரிழப்பு ஏற்பட்டால் இரத்தம் பாகுத்தன்மையை பெற்று, இதயம் திறம்பட பம்ப் செய்வது கடினமாகிறது.
Also Read : தினமும் ஒன்று – இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இரத்த ஓட்டம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். உடலெங்குமிருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவது, உறுப்புகள் மற்றும் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்ப்பது ஆகியவை இரத்த ஓட்டத்தினால் மட்டுமே நிகழ்கின்றன. மேலே கூறிய பானங்கள் இயற்கையான வழியில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகின்றன. வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பதே சீரான இரத்த ஓட்டத்திற்கு மிகவும் முக்கியமாகும்.
நந்தி ஃபுட்ஸ் நிறுவனத்தார் சுக்குமல்லி பொடியை ஹோம் மேடாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள். ரசாயனமோ, நிறமிகளோ சேர்க்கப்படாமல் தயார் செய்யப்படும் இந்த சுக்குமல்லி காபி / டீ-யானது, ரசாயன கலப்பில்லாத சுத்தமான தனியா, சுக்கு, மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரம், கிராம்பு, சித்தரத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. 50 கிராம் ரூ.59. (கூரியர் அல்லது தபால் செலவு தனி) மழை, குளிர்காலத்துக்கு ஏற்ற, நந்தி ஃபுட்ஸ் சுக்குமல்லி டீ / காபி பொடி தேவைப்படுவோர் 94440 86655 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry