பல வருட யூகங்களுக்குப் பிறகு எம்.எஸ்.தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி ஓய்வை உறுதி செய்துவிட்டதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் சூசகமாகக் கூறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை ஃபைனலுக்கு அழைத்துச்சென்ற கேப்டன் என்ற பெருமையை 2023 ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனி பெற்றார். அதற்குப் பிறகு 2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, சாதாரண வீரராக சிஎஸ்கே அணியில் பங்கேற்று வருகிறார்.
Also Read : ஹேர் டையில் நல்லது, கெட்டதை கண்டறிவது எப்படி? ஹெர்பல் ஹேர் டையும் சிக்கலை ஏற்படுத்துமா? Health Tips!
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் இடையில் ஐபிஎல் உரிமையாளர்களுடன் விதிமுறை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட உரையாடல்களுக்கு பிறகு, அன்கேப்டு வீரராக தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற செய்தி வைரலானது. தற்போது சிஎஸ்கே அணி பகிர்ந்திருக்கும் ஒரு பதிவானது, தோனி மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அந்த ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான விதியை பொறுத்தே தோனி விளையாடுவதை முடிவெடுப்பார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், தோனியின் நெ.7 ஜெர்ஸியை பகிர்ந்து ‘மேஜர் மிஸ்ஸிங்’ என சிஸ்கே நிர்வாகத்தினர் பதிவிட்டுள்ளனர்.
Major Missing 🥹💛#WhistlePodu #Yellove pic.twitter.com/y2dlSAmKs8
— Chennai Super Kings (@ChennaiIPL) September 11, 2024
இதற்கிடையில், ரிஷப் பந்த் சிஎஸ்கே அணிக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி கேபிடல் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் வெளியேறிய பிறகு, டெல்லி அணி நிர்வாகத்துக்கும், பந்த்துக்கும் இடையே சுமுக உறவு இல்லை.
தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் வந்தால், கேப்டன் பதவியை மாற்றுவது குறித்து சிஎஸ்கே யோசிக்கும். ஐபிஎல் 2024 சீசனின் போது ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் பிளே ஆஃப்களை எட்டத் தவறியதால் அவரால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. ரிஷப் பந்த்தை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தால் அவர் கேப்டனாக இருக்கவே விரும்புவார். ஏனெனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்துவிட்டே பந்த் சிஎஸ்கே அணிக்கு வருகிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry