இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது. வெற்றிலை என்றால் முன்னோர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்துக் கொண்டு மெல்லக்கூடிய ஒன்றாக தான் பலரும் அறிந்திருப்போம். இதோடு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளில் வெற்றிலையை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். இதெல்லாம் வெறும் நடைமுறைகளாக மட்டுமல்ல, வெற்றிலையை அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.
இந்தியில் ‘பான் கா பதா’என்றும், தெலுங்கில் தாமலபாக்கு என்றும், தமிழில் வெத்தலபாக்கு என்றும், மலையாளத்தில் வட்லா என்றும் அழைக்கப்படும் இந்த வெற்றிலைகள் உடல்நலத்திற்கு உதவக்கூடியவை. வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவை வெற்றிலையில் நிறைந்துள்ளதால், இதில் நோய் தீர்க்கும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
Also Read : வீட்டில் செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செடிகளுடனான உரையாடல்!
சர்க்கரை அளவைக் குறைக்கும் வெற்றிலை:
இன்றைய உணவு பழக்கம் மற்றும் கலாச்சார முறைகளால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே இதைக் கட்டுப்படுத்தாவிடில் வாழ்நாள் முழுவதும் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே உணவு முறையில் சர்க்கரையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் கட்டாயம் வெற்றிலையை சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
மூட்டு வலியைப் போக்கும் வெற்றிலை:
வெற்றிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வலி நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மூட்டு வலியால் அவதிப்படும் போது வெற்றிலையை சாறாக எடுத்து பருக வேண்டும். இது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியம் மற்றும வலியைக் குறைக்க உதவுகிறது. மட்டுமின்றி கால்களில் ஏற்படக்கூடிய காயங்கள், சீராய்ப்புகள், தடிப்புகள் போன்றவற்றிற்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொழுந்து வெற்றிலையை பேஸ்ட் போல அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். வெற்றிலை சாறு உடலின் உள்ளே ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
சுவாச பிரச்சனையைப் போக்கும் வெற்றிலை:
இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் கட்டாயம் வெற்றிலையைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நெஞ்சு சளி இருக்கும் சமயத்தில் வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து கசாயம் போன்று தயார் செய்து பருகலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சளி பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. இதோடு மட்டுமின்றி வெற்றிலையை மிதமான சூட்டில் வைத்து நெஞ்சில் ஒத்தடம் கொடுப்பதும் சிறந்தது.
செரிமானத்தை சீராக்கும் வெற்றிலை:
சைவ உணவோ? அசைவ உணவோ? எதை அதிகமாக சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை ஏற்படுவது இயல்பான ஒன்று. இதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் வெற்றிலை சாப்பிடலாம். வெற்றிலையின் கார தன்மை, வயிறு மற்றும் குடலில் உள்ள pH சமமின்மையைத் திறம்பட நடுநிலையாக்கி, செரிமான ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள கர்மினேடிவ் பண்புகள் குடல் இயக்கத்தைப் பாதுகாக்கிறது. மேலும் வெற்றிலையில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வெற்றிலை பித்த தோஷங்களை அதிகரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் வாத மற்றும் கப கூறுகளை சமநிலைப்படுத்துகின்றன.
மலச்சிக்கலைப் போக்குகிறது:
வெற்றிலைகளில், உடலில் இருந்து ரேடிக்கல்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் சாதாரண PH அளவை மீட்டெடுத்து, வயிற்றுக் கோளாறை சரிசெய்ய உதவுகிறது. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெற்றிலை சாப்பிடுவதை ஆயுர்வேதம் பரவலாக பரிந்துரைக்கிறது. வெற்றிலையை நசுக்கி இரவில் தண்ணீரில் போடவும். காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரைக் குடிக்கவும். இவ்வாறு செய்தால் மலச்சிக்கல் சரியாகும்.
ஆன்டிசெப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்:
வெற்றிலையில் அற்புதமான ஆன்டிசெப்டிக் பண்புகள் உள்ளன, ஏனெனில் அவற்றில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக அதில் உள்ள சாவிகோல் கிருமிகளிலிருந்து இரட்டைப் பாதுகாப்பை வழங்குகிறது. இது கீல்வாதம் மற்றும் விரையழற்சி சிகிச்சையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அற்புதமான பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை தொற்றுகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் வெற்றிலையின் பேஸ்ட்டைத் தடவினால் பூஞ்சை தொற்று அழிக்கப்படுகிறது.
Also Read : இதய பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? பரிந்துரையை மீறினால் படு ரிஸ்க்!
வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது:
வெற்றிலையில் ஏராளமான ஆன்டிமைக்ரோபியல் ஏஜென்டுகள் உள்ளன. வாயில் துர்நாற்றத்தைத் தூண்டும், அத்துடன் துவாரங்கள், பிளேக் மற்றும் பல் சிதைவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும் பல பாக்டீரியாக்களைத் திறம்பட எதிர்த்துப் போராடுகின்றன. உணவுக்குப் பிறகு சிறிதளவு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய்வழி தொற்றுகள் நீங்கும்.
புற்றுநோயைத் தடுக்கிறது:
வெற்றிலையை புகையிலை மற்றும் பாக்குடன் எடுத்துக் கொண்டால் வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். இருப்பினும், வெற்றிலையை மட்டும் சாப்பிடுவதால் நன்மைகள் ஏற்படும். ஏனெனில், வெற்றிலையில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, பிறழ்வு எதிர்ப்பு மற்றும் பெருக்க எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மதிப்புமிக்க பினாலிக் கலவைகள் நிரம்பியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை தவிர, வெற்றிலையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய பைட்டோ கெமிக்கல்களும் உள்ளன.
மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது:
மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டும் இயற்கை மருந்தாக பல ஆண்டுகளாக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலையில் உள்ள நறுமண ஃபீனாலிக் கலவைகள் கேடகோலமைன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது, இது உடல் நலனையும் மனநலனையும் மேம்படுத்துகிறது. எனவே வெற்றிலையை மட்டும் மென்று சாப்பிடுவது மன அழுத்தத்தைப் போக்க ஓர் எளிய வழியாகும்.
முடி & சரும நன்மைகள்:
வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி வேகமாக வளர உதவுகிறது. முடி உதிர்வு பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. முடியின் பொலிவை அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவும் உதவுகிறது. வெற்றிலையின் சிகிச்சை பண்புகள் அரிப்பு, பொடுகு மற்றும் தலைமுடி வெடிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆன்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்ட வெற்றிலை, சொறி, முகப்பரு, அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் போன்ற தோல் கோளாறுகளுக்கு இயற்கையான சிகிச்சை முறையாக அமைந்துள்ளது. இந்த இலைகள் சருமத்துளைகளுக்குள் மறைந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி சருமத்தை சுத்தப்படுத்தவும், ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry