விமர்சனம் செய்ததால் ஆவேசம்! அமைச்சர் பிடிஆர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு!

0
179

வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பாஜகவினர் மதுரை விமான நிலையம் அருகே குவிந்திருந்தனர்.

அப்போது, இந்நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “அரசு நிகழ்ச்சி என்பதால் இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்” என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிதி அமைச்சரின் காரின் மீது பாஜக தொண்டர்கள் காலணிகளை விட்டு எறிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலணி எறிந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்னர் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து சென்றது. அமைச்சரின் கார் மீது காலணி வீசியது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 5 பேரை அவனியாபுரம் காவல்நிலைய போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

Also Read : சுகர் பேஷன்டுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! இதை மட்டும் செய்ங்க, உங்க வாழ்வே சிறப்புதான்!

முன்னதாக ரஜ்ஜவுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், லட்சுமணன் உள்பட ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின், அவரது உடல் இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Also Read : போதைப்பொருளால் சீரழியும் மாணவர்கள்! கஞ்சா வேட்டையைத் தடுக்கும் அதிகார வர்க்கம்!ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry