தமிழக பாஜக துணைத் தலைவரான அண்ணாமலை, கேரளாவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சோலையார், அகலி, புதூர் கிராமங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.
தமது பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறியுள்ள அண்ணாமலை ஐ.பி.எஸ்., கம்யூனிஸ்டுகளின் தங்கக் கடத்தல் ஊழலில் தாங்கள் ஜொலிக்கும் நிலையில், செயல்பாடற்று இருக்கும் காங்கிரஸும் பாஜக வேட்பாளர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு இடையே, அட்டப்பாடி கிராமத்தில், தான் மிகவும் நேசிக்கும் நாட்டுப்புற பாடகி நஞ்சியம்மா–வை, அண்ணாமலை அவரது வீட்டில் சந்தித்தார்.
நஞ்சியம்மா வீட்டில் சுமார் அரை மணிநேரம் செலவிட்ட அண்ணாமலை, அவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக கூறினார். உண்மையான, எளிய மற்றும் தெய்வீக ஆத்மாக்களில், நஞ்சியம்மாவும் ஒருவர் எனக் கூறிய அண்ணாமலை, இருளர் சமூகத்துக்கே அவர் ஒரு அடையாளம் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
God resides among simple souls!
Today had the privilege of meeting one such noble soul.
In the midst of our campaigning met Smt. Nanjamma of Ayyappanum Koshiyum fame. She was kind enough to sing her beautiful Irula language folk song that has made her a star among all of us! pic.twitter.com/wjhVenosKa
— K.Annamalai (@annamalai_k) December 8, 2020
தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி கிராமம்தான் நஞ்சியம்மாவின் பூர்வீகம். கணீர் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான நஞ்சியம்மா, கலைக்குழுக்கள் மூலம் ஏராளமான மேடைகளில் பாடியிருக்கிறார். ‘ஆசாத் கலாசங்கம்’ கலைக்குழுவின் பழனிச்சாமி என்பவர் மூலம் நஞ்சியம்மா வெள்ளித்திரைக்கு வந்தார்.
இயக்குநர் சச்சி இயக்கத்தில், பிரித்திவிராஜ், பிஜூ மேனன் இணைந்து நடித்து, கேரளாவில் ஹிட் அடித்த ‘அய்யப்பனும், கோஷியும்’ படத்தில், ‘களக்காத்த சந்தனமேரம் வெகு வேகா பூத்திருக்கு’ என்று தொடங்கும் டைட்டில் பாடலைப் பாடினார் நஞ்சியம்மா. யூ–டியூபில் 45 லட்சம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என்று அனைத்துத் சமூக வலைதளங்களிலும், அந்தப் பாடல் பெரும் வைரலானது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry