ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்! முதல்வரின் மகனும், மருமகனும்தான் கட்சியே! #PTRLeaks – 2nd Audio!

0
274

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை டிவிட்டரில் வெளியிட்ட இரண்டாவது ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘DMK FILES’ என்ற பெயரில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் முதலமைச்சர் குடும்பத்தினரின் ஊழல் மற்றும் சொத்துப் பட்டியலை, அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரீசன் குறித்து நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் ஒரே ஆண்டில், ரூ.30 ஆயிரம் கோடி வரை சேர்த்துள்ளதாகவும், இதை எப்படி கையாள்வது, கணக்கு காட்டுவது என்பது தெரியாமல் தவித்து வருவதாகவும் தியாகராஜன் பேசியது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்! அலுவலகத்தில் புகுந்து வெட்டிக்கொல்லப்பட்ட வி.ஏ.ஓ.! மணல் மாஃபியாவுக்கு ஆதரவாக இருந்த போலீஸ்?

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாக இரண்டாவது ஆடியோ வெளியாகியுள்ளது. இதனை ‘DMK FILES’ என்ற பெயரில் அண்ணமாலை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது தேசிய அளவில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

Listen to the audio here:

அந்த ஆடியோவில், ஒருநபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பா.ஜ.க.விடம் எனக்கு பிடித்த விஷயம் இது தான். கட்சியையும், மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர்.

நிதி மேலாண்மை செய்வது சுலபம், இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும்(அமைச்சர் உதயநிதி), மருமகனும்(சபரீசன் ) தான் கட்சியே….! அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது.

எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால் இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும். எப்படி சொல்வது. நான் இந்த யுத்தத்தை சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இவ்வாறு தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry