காஞ்சிபுரம் அருகே பயங்கரம்! தம்பியை கொன்ற கல்லூரி மாணவன்! குடிபோதையால் வாழ்க்கையை இழந்த பரிதாபம்!

0
88

காஞ்சிபுரம் அருகே தம்பியை கொன்ற அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையுண்ட தம்பி பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தட்சிணாமூர்த்தி – முகிலா தம்பதியினருக்கு, லிங்கேஸ்வரன் மற்றும் தேவபிரகாஷ் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனான லிங்கேஸ்வரன் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தம்பி தேவபிரகாஷ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த தேவபிரகாஷ், தனது தாயார் முகிலாவிடம் தகராறு செய்துள்ளார். இதை தட்டிக் கேட்ட அண்ணன் லிங்கேஸ்வரனுக்கும், அவரது தம்பிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முடிந்து அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது தம்பியை, லிங்கேஸ்வரன் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டார். சம்பவ இடத்திலேயே தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வாலாஜாபாத் காவல்நிலைய போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த அவர்கள், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பியை கொலை செய்த கல்லூரி மாணவரான அண்ணன் லிங்கேஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையுண்ட தம்பி தேவபிரகாஷ் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்பதும், மதூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கொலை வழக்கில் இவர் குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கட்டுப்பாடு! மக்களே தடுக்க சட்டத்திருத்தம்! தமிழக அரசு அரசாணை!

மதுபோதை இந்த சகோதரர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. மதுவுக்கு அடிமையாவது என்பது ஸ்லோ சூசைட்டுக்கு சமம். மது அடிமைகளின் உளவியல் என்பது ஒரு தனி மைண்ட் செட் கொண்டது. தொடக்கத்தில் மது அருந்துபவர்கள் ஒரு கியூரியாசிட்டியிலோ, யாரேனும் ஊக்கப்படுத்துவதன் அடிப்படையிலோ மது அருந்துகிறார்கள்.

அதன்பின் படிப்படியாக அவர்கள் மதுவுக்கு அடிமையாகி மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால், அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்த குடும்பமும் அவதிக்கு ஆளாகிறது. இந்த பழக்கத்தில் சிக்குண்டவர்களை மீட்க, உளவியல் மருத்துவர்களையும், மறுவாழ்வு மையங்களையும் அணுகலாம். பிரவீன்ராஜ் என்பவர் இலவச குடி போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வருவதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. முறையான விசாரணைக்கு தொடர்பு எண் – 94488843468, 7339278484.

Also Read: 6 மாதத்துக்குள் பார்களை மூட வேண்டும்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் பார் உரிமையாளர்கள்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry