6 மாதத்துக்குள் பார்களை மூட வேண்டும்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் பார் உரிமையாளர்கள்!

0
209

‘தமிழகத்தில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும்’ என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என்றும், பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து, பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தார். அவர் தனது தீர்ப்பில், “தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.

டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 அனுமதிக்கவில்லை. இந்தச் சட்டத்தில் 2003ல் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, மாநிலத்தில் மதுபானங்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் டாஸ்மாக் மட்டுமே ஏகபோக உரிமையை வைத்திருக்கிறது. பார்களை நடத்துவதற்கு உரிமம் வழங்கும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு மட்டுமே உண்டு. எனவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ “பார்களை” நடத்துவதற்கு மாநகராட்சியை சட்டம் அனுமதிக்கவில்லை.

பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. “பொது இடத்தில் ஒரு நபர் குடிபோதையில் இருக்க சட்டம் அனுமதிக்கவில்லை. மதுக்கடை பொது இடமாக இல்லாவிட்டாலும், மது அருந்திய பின், பொது இடங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, டாஸ்மாக் நேரடியாகச் செய்ய முடியாததை, மறைமுகமாகவும் செய்ய முடியாது.

பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி சி. சரவணன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry