முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது சொந்த நிதிக்காகவா? அல்லது மாநிலத்துக்கு நிதி திரட்டவா? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட 2022 – 2023ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, முதலமைச்சரின் குடும்பத்துடன் துபாய் சென்றிருப்பதை விமர்சித்தார். முதலமைச்சர் மருமகன் சபரீசன் முன்னிறுத்தப்படுவதை குறிப்பிட்ட அவர், துபாயில் 5 நாளில் EXPO முடியவுள்ள நிலையில், இப்போது தமிழகம் சார்பில் அரங்கை திறந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
துபாயில் லூலூ இண்டர்நேசனல் உரிமையாளர் யூசு அலியுடன் சபரீசன். OMR & ECRல் லூலூ குழுமம் பல கோடி முதலீடு செய்ய உள்ளது. pic.twitter.com/1ZZxg2oCtb
— Savukku_Shankar (@savukku) March 25, 2022
இவரும் துபாய் சென்றுள்ளார். https://t.co/nve3wuTedj
— Savukku_Shankar (@savukku) March 23, 2022
192 நாடுகள் பங்கேற்கும் துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருமகன் சபரீசன் ஒரு மாதத்துக்கு முன்னரே துபாய் சென்று பயணத்திட்ட ஏற்பாடுகளை செய்துள்ளார். ஸ்டாலின் யாரையெல்லாம் சந்திப்பது என்பது குறித்தும் சபரீசனே தீர்மானித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. அரசிலோ, கட்சியிலோ எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் சரவ் அதிகாரத்துடன் சபரீசன் இது போன்ற பல விஷயங்களை மேற்கொள்வதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
இதனிடையே, பிரபல வாரமிருறை இதழில், ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து வெளியான தகவலை பிரசுரித்துள்ளார்கள். அதில், “எதற்கெடுத்தாலும் நிதி இல்லை; மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், இங்கிருந்து துபாய்க்கு ஐயாயிரம் கோடி ரூபாய் சென்றுள்ளது. இந்தப் பணம் எப்படி, யார் வழியாகச் சென்றது என்கிற விவரங்கள் அனைத்தும் டெல்லியில் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பின் துபாய் விசிட் முடிந்த பிறகு மகாராஷ்டிரா பாணியில் இங்கும் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கை இருக்கும். எல்லாவற்றையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று சொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க சார்பில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கேட்டும், காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கக் கோரியும் தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலை, “முதலமைச்சருடன் ஒரு பட்டாளமே துபாய் சென்றுள்ளது. முதலமைச்சரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம்?” என்று காட்டமான கேள்வியுடன் கண்டன உரையை முடித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &