உணவகங்களில் செய்யப்படும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்க சோடா உப்பு பயன்படுத்தப்படுகிறது. சோடா உப்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் நலக்குறைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது?
சோடா உப்பு என்பது ஆங்கிலத்தில் Baking Soda என்று அழைக்கப்படுகிறது. இதிலிருக்கும் Sodium Bicarbonate காரத்தன்மையுடைய உப்பாகும். இதை மாவில் கலந்து பயன்படுத்தும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்ஸைட் உருவாகிறது. இதுவே மாவு மிருதுவாகவும், பஞ்சுப்போலவும் இருக்கக் காரணமாகும்.
சோடா உப்பு சாப்பிட்டால் வயிறு புண்ணாகிவிடும் என்று சொல்வது தவறாகும். உண்மையிலேயே Sodium Bicarbonate வயிற்றில் உள்ள புண்களால் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகிறது. வயிற்றில் புண்கள் இருக்கும் சமயத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும்.
அதைக் குறைக்க Baking Sodaவை தண்ணீரில் சிறிது கலந்து குடித்தால், வயிற்றில் உள்ள எரிச்சல் குணமாகும். அது மட்டுமில்லாமல் அசிடிட்டி பிரச்னைகளை போக்க சோடியம் பைகார்பனேட் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சோடா உப்பால் அசிடிட்டி, அல்சர் அதிகமாகிவிடும் என்று சொல்வது தவறாகும். அதை குறைப்பதற்கு சோடா உப்பு உதவும் என்று சொல்லலாம்.
Also Read : தினமும் 15 முருங்கை இலைகளை சாப்பிட்டால்..? பிரமிக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
மருத்துவத்திலும் சோடியம் பைகார்பனேட் நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கிட்னி செயலிழப்பு பிரச்னை, அதிக பொட்டாசியம் உள்ளவர்கள், Acidosis பிரச்னை ஆகியவற்றிற்கு சிகிச்சையாக இதைப் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல், இது கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
மவுத் வாஷ் போன்றவற்றில் சோடா உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது கிருமிகளை அழிப்பதோடு மட்டுமில்லாமல், பற்களையும் வெண்மையாக்குகிறது. விளையாட்டு வீரர்கள் குடிக்கும் Energy Drinkல் சிறிது சோடியம் பைகார்பனேட் கலந்திருப்பார்கள். இது அவர்களுடைய எனர்ஜியை அதிகப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. சோடா உப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சோடா உப்பை தீவிர இருதய செயலிழப்பு உள்ளவர்கள், உப்பை வெளியேற்ற முடியாமல் இருக்கும் சிறுநீர் பிரச்னை உள்ளவர்கள், அதிக அளவு இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. இதில் உள்ள சோடியத்தால் இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் சற்று உயரலாம், உடலில் நீர் கோர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக இவர்கள் உணவில் அதிகளவில் சோடா உப்பு சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதைத் தவிர, பெரும்பாலான மக்கள் சோடா உப்பு எடுத்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் கிடையாது. எனவே, சோடா உப்பை தாராளமாக சமையலில் பயன்படுத்தலாம். இதனால் எந்த உடல் நலக்குறைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : இளசுகளை பாடாய்ப்படுத்தும் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய மிரட்டல்..! அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!
அதேநேரம், சோடா உப்பில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளுக்கும் பாதிப்பை தரலாம். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதுடன், நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் குறைக்கலாம். இந்த சோடாவிலுள்ள பாஸ்போரிக் அமிலமானது, வயிற்றிலிருக்கும் அமிலத்துடன் தொடர்பு கொண்டு செரிமானத்தை குறைத்துவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் தடுத்து நிறுத்திவிடும். எனவே, அளவுடன் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.
With Input Kalki. Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry