சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழில் நிறுவும் பெரு நிறுவனங்களை அச்சுறுத்தும் பணி தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் Wistron தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியை ஆராயும்போது இது தெளிவாகப் புலப்படுகிறது.
பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தில், தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் (Wistron Corporation) தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், லெனோவோ (Lenovo), மைக்ரோசாப்ட் (Microsoft), போன்ற வேறு சில முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில், கடந்த 12ம் தேதி, நடத்தப்பட்ட தாக்குதலில், 440 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக, இந்தியாவில், வர்த்தகத்தை விரிவாக்குவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தயக்கம் காட்டுகிறது. விஸ்ட்ரான் நிறுவனத்துக்கு புதிய ஆர்டர்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
விஸ்ட்ரான் வன்முறை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான SFI-ன் நிர்வாகி ஸ்ரீகாந்த் என்பவரை கைது செய்து போலீஸார், பின்னர் விடுவித்துள்ளனர். வாட்ஸ் செய்திகள் மூலம், தொழிலாளர்களிடையே நிறுவனத்துக்கு எதிராக அவர் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளார் என போலீஸார் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்தில், AICCTU தொழிற்சங்கமானது, தொழிலாளர்களிடையே அசாதரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போது வழங்கப்படும் ரூ.22,000 மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்பதை மையமாக வைத்து அவர்கள் வன்முறையை தூண்டியுள்ளனர்.
இதுபற்றி விசாரணை செய்த, விஸ்ட்ரான் தலைமையகம், கோலாரில் உள்ள தொழிற்சாலையில் சில ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் தரப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கு துணைத் தலைவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. நிர்வாகத்துடனான பிரச்சினைக்காக, போராட்டம் நடத்தலாம், பணிப்புறக்கணிப்பு செய்யலாம், ஆனால், ஆலையில் வன்முறை வெறியாட்டம் நடத்துவதை எப்படி ஏற்க முடியும்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியேறிய ஃபாக்ஸ்கான், ஐபோன் நிறுவனங்கள் வருத்தப்படத்தான் வேண்டும் என்ற ரீதியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான க்ளோபல் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
This is a potential risk when manufacturers consider moving their production lines out of #China where they have most stable labor market supporting the nation to become the largest manufacturing hub. Does Terry Gou from #Foxconn, regret about moving those #iPhone lines to #India https://t.co/I4xOCmXh32
— Qingqing_Chen (@qingqingparis) December 13, 2020
விஸ்ட்ரானில் நடத்தப்பட்ட வன்முறை மூலம் சீனா திட்டத்தை கச்சிதமாக நிறைவேறியுள்ளது. 2020-ம் ஆண்டு தொடக்கம் வரை, வெஸ்ட்ரான் உள்பட மொபைல் ஃபோன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் தைவானில் இருந்தன. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பதை அடுத்து, அங்கிருந்து ஒவ்வொரு நிறுவனமாக வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனால் தொழில்துறை தேக்கமடைந்து, வேலைவாய்ப்புகள் குறையும் என அஞ்சும் சீனா, தனது நாட்டை விட்டு வெளியேறும் நிறுவனங்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
விஸ்ட்ரானின் அரங்கேற்றப்பட்ட வன்முறை குறித்த செய்தியானது சர்வதேச ஊடகங்களன Bloomberg, New York Times, The Wall Street Journal போன்ற நாளிதழ்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவுக்கு இடம்பெயர நினைக்கும் தொழிற்சாலைகளை தடுக்கும் வேலையை சீனா சாமர்த்தியாக செய்துள்ளது.
Bloomberg : Apple Push Into India Dealt Setback as Protest Turns Violent
விஸ்ட்ரான் நிறுவனத்தில், ஊழியர்கள் என்ற போர்வையில் வெளியாட்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் சீன கைக்கூலிகளால் ஏவப்பட்டவர்களா அல்லது Wistron India-வின் துணைத் தலைவர் சீன கைக்கூலியா என்பது பற்றி தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry