சுதந்திரத்துக்காக பெரியாரும், அண்ணாவும் என்ன செய்தனர்? பாரதியார் குறித்த தி.க. கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

0
32

மகாகவி பாரதியாரின் சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான சரவணகுமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வேல்ஸ் மீடியாவுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், “பாரதியார் பற்றி பேசுவதற்கு முன் தங்களது தரம் என்பதை மதிமாறன் போன்றவர்கள் சிந்திக்க வேண்டும். திராவிடம் என்பதே பொய், ஆனால் அதை முன்னிறுத்தி ஆரியம் திராவிடம் என பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் பெரியாரியவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக என்ன செய்துள்ளனர்? சுதந்திரம் வேண்டி ஒரு போராட்டம் நடத்தி கைதானதுண்டா? திராவிட இயக்கத்தினர் பிரிட்டாஷிரின் அடிவருடிகளாத்தான் இருந்தார்கள்எனவும் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரியாரிய சித்தாந்தவாதியாகவும், எழுத்தாளராகவும் கூறப்படும் மதிமாறன் என்பவர், மகாகவி பாரதியாரைப் பற்றியும், அவரது சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். வெள்ளையர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார் என்பது போன்ற அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரியாரிய சிந்தனையாளர்கள் எனக்கூறிக்கொள்வோர், இந்து மதத்தை இழிவுபடுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இந்து மத கடவுள்களையும், சடங்களுகளையும் அவமதித்து வந்த அவர்கள், தற்போது, நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய இந்து மதம் சார்ந்த தலைவர்களையும் கொச்சைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.   

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry