புதுச்சேரியில் கோலமாவு விநியோகித்த கலாம் சேவை மையம்! குடும்பப் பெண்களின் தியாகத்தை கவுரவிக்கும் முயற்சி!

0
67

புதுச்சேரியில், கலாம் சேவை மையத்தினர், மார்கழி மாதத்தையொட்டி, பல வண்ண கோலப்பொடி விநியோகித்தனர். கோலம் போடுவதன் பயன் என்ன என்பதற்கான அறிவியல் விளக்கத்தையும் அவர்கள் துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்தனர்.

வழக்கொழிந்து வரும் பழமையான கலாச்சராத்தை மீட்டெடுக்கும் விதமாக, முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் கார்த்திகை தீபத் திருநாளுக்கு முன் வீடு வீடாக அகல் விளக்குகளை வழக்கறிஞர் சம்பத் விநியோகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக, வண்ண கோலப் பொடியை வழக்கறிஞர் சம்பத் தலைமையில் கலாம் சேவை மையத்தினர் தொகுதி முழுவதும் விநியோகித்துள்ளனர்.

மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தப்பட்டு வழக்கொழிக்கப்பட்டவைகளில் மார்கழி மாத அதிகாலையில் கோலம் போடுவதும் ஒன்று. கோலம் போடுவது மூடநம்பிக்கை அல்ல என்பதை தெளிவாக விளக்கும் துண்டறிக்கைகளை அச்சடித்து விநியோகித்துள்ள கலாம் சேவை மையத்தினர், மார்கழி அதிகாலையில் கோலம் போடுவதன் பின்னணியில் இருக்கும் அறிவியலையும் அதில் எடுத்துரைத்துள்ளனர். அதனுடன் அச்சிடப்பட்ட கோலமாதிரிகளையும் அவர்கள் விநியோகித்தனர்.

பிரபல வழக்கறிஞர் சம்பத் தலைமையிலான கலாம் சேவை மையத்தினர், பொது சேவையில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். சித்திரை மாதத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகளின் சிரமம் அறிந்து, சிக்னல்களில் பந்தல் அமைத்துக் கொடுத்தனர். வேல்ராம்பட்டு ஏரியை, சம்பத் தனது சொந்த செலவில் தூர்வாறியதன் பலனாக, தற்போது அந்த ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் பல கிராம மக்கள் பயன்பெறுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், சாலை செப்பனிடுவது, கழிவறை இல்லாமல் சிரமப்படும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுப்பது, புயல் நிவாரணம் உள்ளிட்ட பணிகளையும் சத்தமில்லாமல் செய்து வருகிறார். தற்போது, முதலியார்பேட்டை தொகுதி முழுவதும் கலாம் சேவை மைய நிறுவனர் சம்பத் 2021-ம் ஆண்டுக்கான காலண்டர்  விநியோகித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry