கொரோனா வைரஸைக் கொல்லும் மாற்று முறை! சென்னை சிம்ஸ் மருத்துவமனை பரிந்துரை! Vels Exclusive!

0
73

கொரோனா வைரஸ் தொற்றாமல் தடுக்கவும், வைரஸ் தொற்றியவர்களுக்கு அதன் தீவிரத்தை குறைத்து விரைவில் குணமடையவும் வைக்கும் வகையில், மூன்றுவிதமான மாற்று முறைகளை, சென்னையைச் சேர்ந்த 84 வயதான விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதில் இன்டர்னல் சோப்பும் அடங்கும்.

காற்றில் பரவும் கோவிட்-19 வைரஸ்

கொரோனா 2-வது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போதைய சூழலுக்கு பயனுள்ள இந்த கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரரான கே. ராமு, சுந்தர் டிஸைர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநராவார். எம்.எஸ். சுவாமிநாதன் ஃபவுண்டேஷனில் பல ஆராய்ச்சிகளையும் அவர் செய்திருக்கிறார். வேல்ஸ் மீடியாவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “கோவிட்-19 வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது என்ற உண்மையை உணர வேண்டும். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதை கவனித்தாலே இந்த உண்மை புரியும்

இருமல், தும்மல் மூலமும் இந்த வைரஸ் பரவும். ஆனால், பெருமளவு காற்றில் பரவுவதால்தான்(Airborne) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. LANCET மருத்துவ ஆய்வறிக்கை இதழிலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மை புரிந்தால்தான் வைரஸ் தொற்றிலிருந்து நாம் மீளமுடியும்.

Source-1: Ten scientific reasons in support of airborne transmission of SARS-CoV-2

Source-2: LANCET Research Establishes, Coronavirus Is Airborne | Latest Video

கோவிட்-19 வைரஸை செயலிழக்கச் செய்தல்

RNA, அதைச் சுற்றி படலமாக புரோட்டின், இவை பிடித்துக்கொள்ள ஏதுவாக முட்கள்(Spikes) போன்று கொழுப்பு, இதுதான் கோவிட்-19 அதாவது SARS-CoV-2 வைரஸ். பொதுவாக இந்த வைரஸானது மூக்கு, வாய் வழியாகவே நமது உடலுக்குள் செல்லும். முதலில் மூக்கு, தொண்டை பகுதிக்குச் செல்லும் கோவிட்-19 வைரஸ், அங்கு பல மடங்கு பெருக்கம் அடைந்து, பின்னர் நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். எங்களது கண்டுபிடிப்பில் பயன்படுத்தியுள்ள வேதிப்பொருளின் சேர்மமான Surfactant என்ற திரவம், கோவிட்-19 வைரஸின் கொழுப்பை, அதாவது Spikes-ஐ கரைத்துவிடும்.  இதனால் கோவிட்-19 வைரஸானது திறனிழந்து, செயல்படாத நிலைக்குத் தள்ளப்படும்.

இன்டர்னல் சோப்

சாதாரண சோப் அல்லது திரவ சோப்பால் நாம் அவ்வப்போது கைகளை கழுவுகிறோம். இதனால் கைகள் மூலம் கோவிட்-19 உள்செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால், தொண்டை, மூக்கில் தங்கிய வைரஸை சாதாரண சோப்புகளால் நாம் அழிக்க முடியாது. இதற்கான தீர்வுதான் இன்டர்னல் சோப்.  இதை Nonionic Surfactant என்கிறார்கள். Polyoxyl Hydrogenated Castor Oil என்பது இதற்குட்பட்ட ஒருவகையாகும். இதை வைத்தே நாங்கள் புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளோம்.

வைரஸை கொல்லும் புதிய கண்டுபிடிப்புகள்

எங்கள் முதல் கண்டுபிடிப்பானது ஒரு எண்ணெய் ஆகும். இதற்கு கொரோனா கார்டு(KORONA GUARD) என பெயரிட்டுள்ளோம். இந்த எண்ணெயை 10ml அளவுக்கு வாயில் ஊற்றி சிறிதுநேரம் கொப்பளித்து விழுங்க வேண்டும்.  ஒரு நாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்துவிட்டு எக்காரணம் கொண்டும் தண்ணீர் கொண்டு வாயை சுத்தம்செய்யக்கூடாது. இந்த எண்ணெயானது தொண்டை வழியாக உட்புறம் செல்லும்போது, வைரஸ்கள் இருந்தால் செயலிழக்கச் செய்யும். அதேநேரம், தொண்டைப் பகுதியில் புதிதாக வைரஸை உட்காரவிடாது. எனவே வைரஸ் தொற்று உள்ளவர்கள் என்றில்லாமல், அனைவருமே இதனைப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் மூலம் தொண்டையை சுத்தம் செய்வது போல, மூக்குக்கு ஸ்பிரே ஒன்றையும் கண்டுபிடித்துள்ளோம். வழக்கமாக மூக்கின் உள் மேல்முனையில் கோவிட்-19  வைரஸ் தங்கும்.   இந்த ஸ்பிரேவை பயன்படுத்துவதன் மூலம், வைரஸானது கொல்லப்பட்டுவிடும். இதன்மூலம் சுவாசப்பாதையையும், நுரையீரலையும் வைரஸிடம் இருந்து நாம் காப்பாற்றிக்கொள்ளலாம். எனவே, வைரஸ் தொற்று உள்ளவர்களும் அல்லது அத்தியாவசியமாக வெளியே செல்ல வேண்டியவர்களும் இந்த ஸ்பிரேவை பயன்படுத்தினால், வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

எங்களது மூன்றாவது கண்டுபிடிப்பு கேண்டி எனப்படும் சாக்லெட். இதுவும் தொண்டைப் பகுதிக்கானதுதான். இதை சப்பி சாப்பிடுவதன் மூலம், தொண்டை பகுதியில் வைரஸ் தங்காது, ஏற்கனவே இருந்தாலும் அது செயலிழந்துவிடும். இதை வாயில் அடக்கிக்கொண்டே தூங்கலாம். இந்த கேண்டியானது மெதுவாகக் கரைந்து தொண்டை வழியாக சென்று கோவிட்-19 வைரஸில் உள்ள லிபிட் லேயரை அழிக்கிறது. கோவிட்-19 வைரஸுடைய கொழுப்பைக் கரைக்க நாங்கள் பயன்படுத்தும் Surfactant என்ற திரவம் விளக்கெண்ணையை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல், எங்கள் கண்டுபிடிப்புகளில், வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய், இலவங்க எண்ணெய், இலவங்க பட்டை எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளோம். எனவே எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

சிம்ஸ் மருத்துவமனை பரிந்துரை

சென்னையில் வடபழனியில் உள்ள பிரபல சிம்ஸ் மருத்துவமனையில், 500 நோயாளிகளுக்கு கொரோனா கார்டு மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டது. முடிவில், இதன் செயல்திறன் ஊக்கமளிப்பதாக கண்டறியப்பட்டது. கொரானா கார்டு ‘வைரஸ் அல்லது சுவாசக்குழாயை பாதிக்கும் வேறு எந்த தொற்றுகளுக்கும் எதிரான நோய் தடுப்பு ஏஜென்ட் என சிம்ஸ் மருத்துவமனை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எனது கண்டுபிடிப்புகள் கோவிட்-19 வைரஸை செயலிழக்கச் செய்யும் என்று சவால்விடுகிறேன். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நூறு பேருக்கு எங்களது மருந்துகளை விநியோகம் செய்து, அதன் பலனை தமிழக அரசு அறியட்டும். எங்களது மருந்துகளை, பத்து நாட்கள் கழித்து அமேசானில் ஆர்டர் செய்து வாங்கலாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் அதேவேளையில், எங்களது மருந்துகளையும் பயன்படுத்தி மக்கள் பயனடைய வேண்டும்என்று ராமு கூறினார்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry